Sunday, November 26, 2017

என் குழந்தைக்கு பாஸ்போர்ட் எடுப்பதற்காக

நண்பர்களே நம் தமிழர்களின் நிலமையைப்பாருங்கள்
எங்கு சென்றாலும் எம் நிலமை இப்படித்தான் நாம் இந்தியர்களா அல்லது தமிழர்களா பாஸ்போர்ட்டில் மட்டுமே இந்தியன் என்கிற அடையாளம்... நம் போராட்டம் தொடர்கிறது

எனது சொந்த ஊர் குமரிமாவட்டம் ஆகும்... நான் தற்போது துபாய் ஜெபில் அலியில் வேலைப்பார்த்து வருகிறேன்..
பர்துபாயில் தங்கிய்ருக்கிறேன்..என்னுடையக் குழந்தையின் பாஸ்போர்ட் எடுப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கல்களை பற்றி பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்..
நான் துபாயில் வந்து 6 மாதங்கள் கடந்துவிட்டன. எனக்கு திருமணமாகி 1 1/2 வயது நிரம்பிய ஒரு பெண்குழந்தையுள்ளது.நான் ஒரு சக்கரை வியாதியோடு வாழ்ந்து வருபவன்..எனவே என் உடல்நிலை மற்றும் மனநிலைக்கருதியும் மற்றும் குடும்பத்தோடு இங்கே வாழவேண்டும் என்பதற்காவும்
என் குழந்தைக்கு பாஸ்போர்ட் எடுப்பதற்காக காலம் காலமாக எல்லோரும் கடைபிடித்து வரும் நடைமுறையின் படி நாகர்கோவில்லுள்ள எங்கள் மாவட்டத்தின் ஆட்சியர் அலுவலகத்தினை என்னுடைய அபிடவேட் சான்றிதழுடன் என்னுடைய மனைவி அணுகினார், அப்பொழுது அங்குள்ள அதிகாரிகள் புதிதாக ஒரு விதியினை வாய்மொழியாகச் சொன்னார்கள் அதாவது என்னுடைய குழந்தைக்கு பாஸ்போர்ட் எடுக்க வேண்டுமென்றால் என்னுடைய பாஸ்போர்ட்டில் உள்ள விலாசமும் என் மனைவியின் பாஸ்போர்ட்டிலுள்ள விலாசமும் ஒன்றாக இருக்கவேண்டுமாம் ஆனால் விதி வசத்தால் என்னுடைய பாஸ்போர்ட்டில் சென்னன விலாசமும் என் மனைவியின் பாஸ்போர்ட்டில் குமரிமாவட்டத்தில் அவர்களுடய வீட்டு விலாசமும் இருந்தது... செய்வதறியாது திகைத்த என்னுடைய மனைவி அதிகாரிகளின் முன்னிலையில் என்னைத்தொடர்பு கொண்டு விசயத்தை என்னிடம் கூறினாள்.. நான் அதிர்ச்சி அடைந்தேன் ஏனெனில் நான் என்னுடைய குழந்தைக்கு பாஸ்ப்போர்ட் விண்ணப்பிக்க ஆரம்பிப்பதற்கு முன் இந்தியன் பாஸ்போர்ட் அலுவலகத்தின் வலைதளத்தில் தகவல்களை சேகரித்து விட்டு அதன் அடிப்படையில் தான்
வேலைகளை ஆரம்பித்தேன்.. பாஸ்போர்ட் அலுவலகத்தின் வலைத்ளத்தில் எங்கேயும் அவர்கள் சொல்லிய படி எந்த விதியும் இல்லை எனவே நான் நினைத்தேன் ஒரு வேளை அதிகாரிகள் வலைத்தளத்தில் அப்டேட் செய்ய மறந்திருப்பார்கள் என நினைத்து மனைவியிட தொலைபேசி இணைப்பினை அதிகாரியிடம் கொடுக்கசொன்னேன் அதன்படி நான் அதிகாரியோடு பேசிப்பார்த்தேன் அவரும் புது ரூல் இருப்பதாகச்சொன்னார் நான் கெஞ்சிக்கூத்தாடிப்பார்தேன் அவரோ இது நாங்களாக ஏற்படுத்திய ரூல்ஸ் இல்லை மதுரை மண்டல அலுவலகம் தான் பதில் சொல்லமுடியும்

வேறு வழியில்லாமல் அரசு ஆணை நகல் எதாவது இருந்தால் என் மனைவியிடம் கொடுங்களேன் என கேட்டுப்பார்த்தேன் அதற்கு அவர் அதெல்லாம் கிடையாது.... கடைசியாய் மதுரை மண்டல அலுவலகத்திற்கு என் மனைவியை போகச்சொல்லலாம் என நினைத்தேன் அங்கேயும் இதே நிலைமைதான் ஏற்பட்டால் என்ன செய்வது எனை நினைத்து இங்கிருந்து மதுரை மண்டல அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு மண்டல அதிகாரியான திரு.ஜோஸ் மாத்யு
வுடன் பேசினேன் அவரோ என்னை மனிதனாகவே மதிக்காமால் கன்னா பின்னாவென்று பேசினார்... நீ ஏன் சென்னையில் எடுத்தாய் உன் மனைவி உன்னோடு வாழவில்லயா... என மனதை நோகடிக்கும் விதமாக பேசிவிட்டு தொடர்பினைத்துண்டித்தார், அதன்பின் இங்குள்ள நண்பர்கள் வட்டத்தில் விசாரித்தபோது என்னை ஏளனமாகத்தான் பார்த்தார்கள் காரணம் அவர்கள் சொன்னது குழந்தைக்கு பாஸ்போர்ட் எடுக்க அம்மா அப்பாவின் பாஸ்போர்டில் ஒரே விலாசம் தேவையே இல்லை மனைவியின் பாஸ்போர்ட்டில் கணவனுடைய பெயரும் கணவனுடைய பாஸ்போர்ட்டில் மனைவியின் பெயரும் இருந்தால் போதும் என்னை யாரோ தவறான தகவல் தந்திருக்கிறார்கள் எனக்கு ஒன்றுமே புரியவில்லை நான் துபாயில் உள்ள தமிழ்ச்சங்கங்களை தொடர்புகொண்டு என் நிலமையைச் சொன்னேன் அவர்களும் என்னுடைய நண்பர்கள் சொல்லியதையே சொன்னார்கள்...கடைசியாய் தமிழ்ச்சங்கத்திலுள்ள ஒரு அன்பரின் வழி காட்டுதல் படி நான் துபாய் இந்தியன் கவுன்சிலேட்டை அணுகினேன் அவர்களும் எல்லோரும் கூறியதைத்தைதான் கூறினார்கள் நானோ இல்லையில்லை மதுரை அலுவலகத்தில் இப்ப்டி சொல்லவில்லை அவர்கள் வேறுவிதமாக சொன்னார்கள் என விளக்கினேன் அவர்கள் சொன்னார்கள் அகில இந்திய அளவில் ஒரே நடைமுறைதான் கடைப்பிடிக்கிறார்கள் நீங்கள் சொல்வது விசித்திரமாக இருக்கிறது..நீங்கள் தவறாக புரிந்து கொண்டுள்ளீர்கள் என என்னை குற்றம் சுமத்தினார்கள்... வேணுமென்றால் அபிடவேட் எடுப்பதற்கு ஏற்பாடு செய்கிறோம்.. நான் சொன்னேன் அபிடவேட் ஏற்கனவே எடுத்தாகிவிட்டது அப்போ பிரச்சினையே இல்லை நீங்கள் மீண்டும் முயற்சி செய்து பாருங்கள்...என சொன்னார்கள்.. நான் மீண்டும் ஒரு முறை ஆட்சியர் அலுவலகத்தை தொடர்பு கொண்டேன் பலன் என்னவோ பூஜ்ஜியம் தான்..கடைசியாய் நான் என்னுடைய மனைவி மற்றும் குழந்தையின் பெயரை என்னுடை வீட்டு குடும்ப அட்டையில் அங்கத்தினர் ஆக்கி என்னுடைபாஸ்போர்ட்டில் என்னுடை குமரிவாட்டவிலாசத்திற்கு மாற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொண்டு வருகிறேன்...அது ஏறக்குறய முடிவடையும் நிலையில் உள்ளது.... இன்னும் ஓரிரு மாதங்களில் என் குழந்தைக்கு பாஸ்போர்ட் கிடைக்கும் நம்பிக்கையோடு காத்திருக்கிறேன் என் நம்பிக்கை விண்போகாது என நம்புகிறேன்...
ஆனால் என்னுடைய பிரச்சினை என்னோடு முடிந்து போகவேண்டும் என நினைக்கிறேன் துபாயில் குடும்பத்தோடு வாழநினைக்கும் இன்னொரு தமிழ் நாட்டுக்காரர் என்னை மாதிரி கஷ்டப்படக்கூடாது என நினைக்கிறேன் நீங்கள் நினைக்கலாம் அகில இந்திய அளவில் எல்லோருக்கும் ஒரே நடைமுறைதான் பின்பற்றப்படுகிறது அப்புறம் ஏன் இவன் இன்னொரு இந்தியர் எனசொல்லாமல் தமிழ் நாட்டுக்காரர் என சொல்கிறான் ஆம் அங்கேதான் நாம் தெரியாத உண்மை ஒன்று மறைந்து கிடக்கிறது ஆம் நண்பர்களே இந்த விதி தமிழ்நாட்டிற்கு மட்டுமே பொருந்தும் காரணம் கடந்த வாரம் என்னுடன் பணி புரியும் கேரளாவை சார்ந்த நண்எபர் ஒருவர் வேவ்வேறு விலாசங்கள் கொண்ட பாஸ்போர்டை மையமாக வைத்துற் காலம்காலமாக கடைபிடித்து வரும் நடைமுறையினை பின்பற்றி தன் குழந்தைக்கும் பாஸ்போர்ட் வாங்கி விட்டார்.இதே போல கர்நாடக மாநிலத்தை சார்ந்தவரும் இதே முறையில் பாஸ்போர்ட் பெற்றுக்கொண்டார்,இதனால் மீண்டும் இந்த புதும் விதிக்காய் விசாரணை செய்தேன் ... இதன் மூலம் நான் புரிந்தும் தெரிந்தும் கொண்டேன் தமிழ் நாட்டில் மட்டுமே இந்த புது விதியை சுயமாக ஏற்படுத்திகொண்டார்கள் என்று அது மட்டுமல்ல திருவனந்தபுரத்தில் வசிக்கும் என்னுடைய் சொந்தங்கள் மூலமாகவும் அங்குள்ள பாஸ்போர்ட் அலுவலகத்தில் என் நண்பர்ளாகிய அதிகாரிகள் மூலமாகவும் நான் விசாரித்து தெரிந்துகொண்டேன் இதனை இவர்களாகவே ஏற்படுத்தி கொண்டதாம் இதற்கு அரசாணை ஒன்றும் கிடையாதாம் சரி அரசாணைதான் இல்லை என்றாலும் பரவாயில்லை பத்திர்கைகள் வாயிலாக பொதுமக்களுக்கு சொன்னார்களா என்றால் அதுவும் இல்லை எல்லோரு காலம்காலமாய் கடைப்பிடிக்கும் வழிமுறைகளைத் பின்பற்றி பாஸ்போர்ட் அலுவலகங்களை தொடர்பு கொள்ளும்போதுதான் புதிய நடைமுறையினை தெரிந்து கொண்டு காலவிரயத்திற்கும் மன உளைச்சலுக்கும் ஆளாகிறார்கள்.என்னுடைய குழப்பம் என்னவென்றால் இந்தியா முழுவதும் ஒரே விதியைத்தான் பின் பற்றவேண்டும்ஏன் தமிழ் நாட்டிற்கு மட்டும் தனியாக ஓரு விதியினை ஏற்படுத்தி செயல்படுத்தவேண்டும்.. சரி பத்திர்கைகள் வாயிலாக பொதுமக்களுக்கு தெரிவித்திருக்கலாமே...நாமெல்லாம் இந்தியர்கள் இல்லையா... மாநிலத்திற்கு மாநிலம் பாஸ்போர்ட் விதி மாறுமாஇதனால் நான் மிகுந்த மன உழைச்சலில் இருக்கிறேன் முடிந்தால் முற்றுப்புள்ளி வைபோமே....

About Me

My photo
Chennai, Tamil Nadu, India
முக்கடலின் திருவேணி சங்கமும் அன்னை குமரிஅம்மனும் வீரத்துறவி விவேகானந்தரின் நினைவுமண்டபமும் பாரததாயின் பாதமுமான கன்னியாகுமரிமாவட்டத்தில் 12 சிவாலய ஆலயங்களில் 11 வது ஆலயமான திருப்பன்றிகோடு ஸ்ரீமாஹாதேவர் குடிகொண்ட மற்றும் பள்ளியாடி பழய பள்ளியப்பன் பள்ளிக்கொண்டுள்ள பள்ளியாடி எனும் ஊரில் மாதவன், கோமதி என்போருக்கு நான்காவது மகனாக பிறந்தவன். வயிற்றுப்பிழைப்புக்காய் வாழ்க்கையின் வசந்தங்களோடு கைகுலக்க வேண்டி சென்னை மாநகருக்கு புலம் பெயர்ந்தவன். வந்த இடத்தில் வாழ்க்கைத்தரம் வளர சென்னைமாநகரம் வாய்ப்பளித்தது.தனிமரமாக வாழ்ந்த நான் கடந்த 2007 மே மாதம் 27ம் தேதி என்னோடு துஷாரா எனும் பெயருடைய இன்னொரு இணை மரத்தையும் என் வாழ்க்கையில் இணைத்துக்கொண்டேன் எங்களின் இனிய இல்லறத்தால் தயனியா என்ற விழுதினை 2009 மார்ச் 14 ம் தேதி ஈன்றெடுத்தோம்.தற்போது சென்னையில் சூளைமேடு எனும் பகுதியில் சந்தோஷமாய் வாழ்ந்து வருகிறேன்....

Search This Blog

Followers