Monday, January 11, 2010

அண்ணாந்து பார்க்கிறோம்

அண்ணாந்து பார்க்கிறோம்

அன்று நீ......
முக்கடலும் சங்கமிக்கும் குமரியிலே
எம் அன்னையின் பாத பாறையிலே
தவம்மது புரிந்தாய்....

ஞாலம் பிறக்கும் முன் பிறந்த காலந்தொட்டு
எம் மண்ணின் ஆன்மீகத்தை ஆராய
இமயம் முதல் குமரி வரை
நடை உனது வாகனமாய்
பசி உனது உணவாய்
தாகம் உனது நீராய்
இலக்கு நோக்கிப் பயணித்தாய்
தேசம் முழுவதும்.....
காவிகட்டியத் துறவியாய் அல்ல
ஓரு கர்ம யோகியாய்.

மிருகபலத்தால் அல்லாமல்
ஆன்மீக பலத்தால் மட்டுமே
பாரதம் எழுச்சிப்பெற போகிறது என
உலகோருக்கு உரக்கச் சொன்னாய்...


சிக்காகோ மாநகரில் சீரியப்பேச்சால்
உலக மாந்தரை உடன் பிறந்தோர் என்றாய்
உலகம் உனையன்று ஆச்சர்யமாய் பார்த்தது
நாங்களின்றுனை அண்ணாந்து பார்க்கிறோம்....

மா.பொ.
சூளைமேடு

குறிப்பு :- 12.01.2010 சுவாமி விவேகானந்தர் அவர்களின் 148-வது ஜென்மதினம்

Saturday, January 9, 2010

தேடுகிறேன் என் கிராமத்தை...................

தேடுகிறேன் என் கிராமத்தை..... என் கிராமம் பசுமையான வயல்வெளிகள் வானுயர்ந்த தென்னைமரங்கள் மற்றும் வாழைமரங்கள் எங்கும் பரந்த புல்வெளிகள் மரவள்ளி கிழங்கு சர்க்கரைக்கிழங்கு என பல வகை கிழங்கு வகைகளும் உளுந்து பயறு என பல வகையான தானிய வகைகளும் எங்கும் கண்ணுக்கு குளிர்ச்சியாய் காட்சியளிக்கும் ஆங்காங்கே பனைமரக்காடுகள்... காற்றில் ஆடும்
தூக்கணாம் குருவிக்கூட்டம் கீச்சுக்குரலிடும் மைனாக்கூட்டம்.வீட்டுக்கு வீடு மா பலா என பலவகை மரங்கள்..... இன்று என் கிராமத்தில் பணப்பயிர் இரப்பராக காட்சியளிக்கிறது...இப்படியே போனால் இன்னும் சில வருடங்களில் எங்கள் கிராமத்தின் வருங்கால சந்ததிகள்(என் குழந்தைக்கூட)நெல் காய்க்கும் மரமேது என வினவலாம். இரப்பரினால் எங்கள் கிராமம் பொரளாதாரத்தில் மேம்பட்டது இல்லை என சொல்லவில்லை ஆனால் பணப்பயிரினால் எங்கள் கிராமம் முன்னேறியது என்பதில் ஐயமில்லை ஆனால் நாங்கள் அதற்கு கொடுத்த விலை கொஞ்சம் நஞ்சமில்லை நல்லக்காற்றை இழந்தோம் கொசுக்கடியை உணர்ந்தோம் மண்ணின் தன்மையை இழந்தோம் அழகிய வயல் வரப்புகளையும் தென்னமரத்தோப்புகளை இழந்தோம்... கற்பகவிருட்சமாய் எங்களோடு வாழ்ந்த பனை மரங்களை இழந்தோம் இப்படி பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது....

இன்று என் கிராமத்தின் முகமே மாறி விட்டது...நான் படித்த பள்ளிக்கூடவும் என் வீடும் ஏறக்குறய 1 கி.மீ இருக்கும் என நினைக்கிறேன் ஆகவே பெரும்பாலும் என்னை ஒத்த மாணவர்கள் நடந்தே பள்ளிக்கூடம் செல்வோம் போகும் சாலையின் இரு ஓரங்களிலும் நெசவுத்தொழிலாளிகள் பாவாத்தும் காட்சியினை வேடிக்கைப்பார்த்துகொண்டே செல்வோம் பாவாத்தல் என்றால் துணி நெய்வதற்கு பயன் படும் நூலினை கஞ்சி தண்ணிப்போட்டு பண்படுத்துவது... பள்ளிக்கு வெளியே கன்னம் குழிவிழுந்த பாட்டி காரக்கா நெல்லிக்கா நிலக்கடலை(வேர்க்கடலை) நாக்கில் தேனூறும் தேன் மிட்டாய் கடலை மிட்டாய் என பலபவிதமான கள்ளபண்டங்கள்(தின் பண்டங்கள்)

Friday, January 8, 2010

நான் யார்....?

நான் வாழ்க்கை எனும் பல்கலைகழகத்தில் தோல்வி எனும் பாடத்தில் பலப் பட்டங்கள் பெற்றவன் இன்றும் பெற்றுக்கொண்டிருப்பவன். நான் துவண்டு விடுவேன் என நினைத்து தூற்றினர் பலர். ஆனால் பாவம் அவர்கள் அறியவில்லை அவர்கள் தூற்றியது என் வாழ்க்கைச் சோலையில் வீசப்பட்ட உரமென்று. நான் பல நேரங்களில் அம்பாக மாறி பலரை காயப்படுத்தியிருக்கிறேன்.எய்தவன் எங்கோ இருக்க அம்பாகியாகிய நான் அவமானப்பட்டிருக்க்கிறேன். பலருக்கு படிக்கல்லாகவும் ஏணியாகவும் உருமாறியிருக்கிறேன்.
பல நேரங்களில் பயணசீட்டு வாங்காத பயணிபோல் பலர் முன்னிலையில் அவமானப்பட்டிருக்கிறேன்.

About Me

My photo
Chennai, Tamil Nadu, India
முக்கடலின் திருவேணி சங்கமும் அன்னை குமரிஅம்மனும் வீரத்துறவி விவேகானந்தரின் நினைவுமண்டபமும் பாரததாயின் பாதமுமான கன்னியாகுமரிமாவட்டத்தில் 12 சிவாலய ஆலயங்களில் 11 வது ஆலயமான திருப்பன்றிகோடு ஸ்ரீமாஹாதேவர் குடிகொண்ட மற்றும் பள்ளியாடி பழய பள்ளியப்பன் பள்ளிக்கொண்டுள்ள பள்ளியாடி எனும் ஊரில் மாதவன், கோமதி என்போருக்கு நான்காவது மகனாக பிறந்தவன். வயிற்றுப்பிழைப்புக்காய் வாழ்க்கையின் வசந்தங்களோடு கைகுலக்க வேண்டி சென்னை மாநகருக்கு புலம் பெயர்ந்தவன். வந்த இடத்தில் வாழ்க்கைத்தரம் வளர சென்னைமாநகரம் வாய்ப்பளித்தது.தனிமரமாக வாழ்ந்த நான் கடந்த 2007 மே மாதம் 27ம் தேதி என்னோடு துஷாரா எனும் பெயருடைய இன்னொரு இணை மரத்தையும் என் வாழ்க்கையில் இணைத்துக்கொண்டேன் எங்களின் இனிய இல்லறத்தால் தயனியா என்ற விழுதினை 2009 மார்ச் 14 ம் தேதி ஈன்றெடுத்தோம்.தற்போது சென்னையில் சூளைமேடு எனும் பகுதியில் சந்தோஷமாய் வாழ்ந்து வருகிறேன்....

Search This Blog

Followers