Monday, July 11, 2011

தீபாவளி...

தீபாவளி................

துள்ளி திரிந்த காலத்தில் தூக்கமிழக்கச் செய்தது

அப்பா வாங்கி வரும் புத்தாடைக்காய்....

மாமா வாங்கி வரும் பட்டாசுக்காய்....

அம்மா செய்து தரப் போகும் குழிப் பணியாரமும்

அறுசுவை உணவுகளும் உறக்கத்தை கெடுக்கும்...

இரவு முழுக்க பட்டாசு வெடித்தலும்

போட்டி வாணவேடிக்கைகளுமாய்.... பொழுதும் புலர்ந்திடும்...

எண்னைக் குளியலும் குதுகுல எண்ணக்குவியலுமாய்...

புத்தாடை உடுத்தி... பல்சுவை பதார்த்தங்களை பதம் பார்த்து

ஊர் நண்பர்க்ளுடனும் சொந்தங்களூடனும் கொண்டாடி.....

பட்டாம் பூச்சியாய் பறந்த காலங்கள்... இன்றும் பசுமையாய்.....

படர்ந்து பரவியுள்ளது இதயத்தின் ஒரு ஓரத்தில்..... பின்

காலங்கள் கரைந்து தாவணி கனவுகளோடு

கல்லூரியில் காலடி வைத்தப் போது

நாம் .......

கொண்டாடிய தீபாவளி................

வாழ்த்து அட்டைகளுடனும்......நம்

அபிமான நட்சத்திரங்களின் திரைப்படங்களை

முதல் காட்சியை கண்டு களித்ததோடு...நம்

தீபாவளி கொண்டாட்டங்கள் கொஞ்சம் குறுகியது... பின்

வாழ்க்கை பயணத்துக்காய்

பட்டணத்திற்கு பயணமானோம்

அடுக்கங்களில் அடங்கிய நம் வாழ்க்கை

தொலைக்காட்சிகளின் வாழ்த்துகளாலும்

தொலைப்பேசி வாழ்த்துகளாலும்

தொலைந்து போன ஊரின் தீபாவளி கொண்டாட்டங்களை

பகிர்ந்து கொள்கிறோம்...இன்று

வாய்ப்புகள் வந்தாச்சு வாழ்க்கைத்தரமும் உயர்ந்தாச்சு

தீபாவளி கொண்டாட்டங்கள் நம்மை

திகட்டவைத்து திகைக்க வைத்தாலும்

ஊரில் உதட்டில் ஒட்டிக்கொண்ட

அம்மா சுட்ட பணியார சுவை இன்றும்

தித்திப்பாய் திகட்டுகிறது

- மா.பொ

சத்தமில்லா சலனம்...

சத்தமில்லா சலனம்


இதமான காற்று..... என்

இதயத்தை வருட....

ஒளிவிலகி இருள் கவ்வியது...

வானத்தை அண்ணாந்துப் பார்த்தேன்......

ஆங்காங்கே... மேகக்கூட்டங்கள்...

ஒன்றையொன்று மெதுவாய் முத்தமிட்டன

சத்தமில்லாமல்....

சில மேகங்கள்............

சத்தமாய் முத்தமிட்டதும் இடியாய் ஒலித்தது...

சத்தமில்லா முத்தத்தால் சலனமில்லை...

இதமான மிதமான காற்று...

மதமான காற்றாய் மாறி....

சூறாவளியாய் ஊரை உருட்டி புரட்டியெடுத்தது...

புகுந்த இடமெல்லாம்....

கர்வமாய் படர்ந்து பந்தலிட்டிருந்த

ஆல் முதல் அத்திமரம் வரையுள்ள மரங்களை

அடிவேரோடு சாய்த்தது........

கண்ணுக்குத் தெரிந்தயிடமெல்லாம்

சூறைக் காற்றின் கோரத்தாண்டவங்கள்....

கண்களைக் குளமாக்கின............

சத்தமில்லாத சாந்தமான சலனங்கள்....

சாந்தியான வாழ்க்கைக்கு வழி செய்யும்


-மா.பொ

சில ஓவியங்களும் ஓசைகளும்............

சில ஓவியங்களும் ஓசைகளும்...........

 அம்மா..... அன்று நீங்கள் என் பாதங்களை
 பாதிப்புகளிலிருந்து பாதுக்காக....
உன்பாதத்தில் என் பாதத்தை வைத்து
பாதுகாவினை(காலணி) பாசமாய்
அணிவித்தாய்.....
உன்னில் ஒரு மருத்துவ குணத்தை
நானின்று உண்ர்ந்தேனம்மா....

நான்...
சிறகு முளைக்காத சிட்டுக்குருவியாய்
சிகரங்ளைத் தொடத்தாவியபோது
எனை உன் சிர மேல் தூக்கி வைத்து
சிறகானாய்.... நீ எனக்கு....
உலகினை நீ எனக்கு அடையாளம்
காட்டியதை நானின்று அறிந்தேனம்மா...

நான்....
வாழ்க்கையெனும் ஓடத்தில்
தடுமாறமாறும் போது..
தோளோடு தோள் சேர்த்து
தட்டிகொடுத்து தாயுள்ளத்தோடு
தாங்கமும் செய்தாய்....
வாழ்க்கையின் வசந்தங்களையும்
வலிகளையும் நீயன்று உணர்த்தியதை
நானின்று உணர்ந்தேனம்மா

நான்....
மாணவனாயிருந்தபோது
பள்ளிப்பாடத்தோடு
வாழ்க்கைப் பாடத்தையும்
சேர்த்தே கற்றுகொடுத்தாய்...
நீ அன்ர்றெனக்கு....
சொல்லித்தந்த வாழ்க்கைப்பாடம் தான்
இன்றும் என்னை.....
வாழ வைத்துக்கொண்டிருக்கிறது...
உன்னில் ஒரு நல்லாசானை
நானின்று உணர்ந்தேனம்மா....

நான்...
களைப்பினால்...
கண்ட இடங்களில்
கண்மூடித் தூங்கிடுவேன்
என நினைத்து..உன் தோளில்
எனை சாய வைத்து.....
சந்தோஷப் பட்டாயம்மா.....
தாயுள்ளத்தை நீ எனை
தாங்கியதை உன் ஸ்பரிசத்தால்
நானின்று உணர்ந்தேனம்மா...

அம்மா...
உன் வசிப்பிடம் பட்டணமானதால்
என் பாட்டி என்னோடு இல்லை
இருந்தும்....
உன் அம்மாவும் பாட்டியும்
உனக்கு சொன்னக் கதைகளை
எனக்கும் சொன்னாய்.....
நம் தலைமுறைகளின் வேர்களை...
ஊன்றியதை என்னில்....
நானின்று உணர்ந்தேனம்மா


அம்மா...
நான் தனியாய்....
தவழ்ந்த காலங்களில்
என் கைகால்களையாட்டி
கெக்கே பிக்கேயென்று குரெழுப்பி
நான் தனியாய்....
விளையாடிய போது
நீ துணையாய்.... என்னுடன்
விளையாடி இன்புற்றாய்...
நீ நல்லத் தோழியாய்
தோள்க் கொடுத்ததை என்னில்
நானின்று உணர்ந்தேனம்மா....

அம்மா....
கால் முளைத்த நாள் முதலாய்....
நான் ஆட்டம் போட்டு...
அழுக்கான என் ஆடகைளை
அழுக்கறத் துவைத்து...
வரிசையாய் கொடியில் காய வைத்து
அழகாய் அடுக்கிவைத்தாய்.......
நீ எனக்கு ....
செயல் நேர்த்தியை உணர்த்தினாய்...
அன்று நீ உணர்த்தியதுதான்
இன்றுமெனை செயல் நேர்த்தியோடு
வாழ வைத்திருக்கிறது....

அம்மா...
நான் கேட்காமல்...
அத்தனையும் எனக்காய் செய்தாய்...
நான் உனக்காய் என்ன செய்யப்போகிறேன்
பட்டணத்தில் உனைப்பிரிந்திருந்த போதும்
நான் உணர்கிறேன் அம்மா உன் குரலை
எனக்கென்று எதுவும் வேண்டாமென
நீ சொல்வதை....
ஆனாலும்...
அடி மனதில் ஒரு அழுத்தம்...
எதாவது செய்ய வேண்டும்
நான் உனக்கு.... ஆம்
அடுத்தத் தலைமுறை அம்மாக்களுக்கும்
உன்னில் என்னையுணர்ந்த
நுகர்ந்த நல் உன் உணர்வுகளை
என்றும் உணர்த்துவெனம்மா......


-மா.பொ

என் பார்வையில் செய்தி....(நித்யானந்தர் ..)

சன் செய்தி தொலைக்காட்சியில் கடந்த இரு நாட்களாக செய்தி வெளியிடுகிறேன் பேர்வழி எனும் பெயரில் சுவாமியார் ஒருவரின் படுக்கை அறைக்காட்சிகளை அப்பட்டமாக ஒளி பரப்பி வருகிறது.... ஒருவரின் தவறை சுட்டிக்காட்ட வேண்டும் தவறில்லைத்தான் ஆனால் அதனை சுட்டிகாட்டும் முறை சரியாக இருக்க வேண்டும்.. செய்திகளுக்கிடையே நாள் முழுவதும் இந்த மாதிரி வக்கிர காட்சிகளை ஒளிபரப்புவதால் தமிழக்த்திலுள்ள எல்லா குடும்பங்களும் ஒன்றாய் அமர்ந்து கொண்டு பார்க்க வேண்டிய இக்கட்டான நிலைமைக்கு சன் நிறுவனம் மக்களை தள்ளியிருக்கிறது. ஒரு தவறை சமுதாயத்தில் சுட்டி காட்டுவத்ற்காக சன் நிறுவன் இன்னொரு

மாபெரும் தவறை செய்திருக்கிறது. நீலப்படத்தரத்துக் இணையான வக்கிரக்காட்சிகளை நாட்டு மக்களின் வீடுகளுக்குள் திணித்திருக்கிறது
வீட்டிலுள்ள சின்னம் சிறார்கள் கூடப்பார்த்துகொண்டுவிட்டு பெற்றோர்களிடம் கேள்விகளால் துளைத்து எடுக்கிறது. அதற்கு ஒரு உதாரணம் நான் இன்று ஆட்டோவில் பயணம் செய்தபோது அந்த ஆட்டோ ஓட்டுநர் கூறிய நிகழ்ச்சி எனக்கு தூக்கி வாரிப்போட்டது
நேற்று இரவு அவ்ரும் அவர் குடும்பத்தினரும் அந்த வக்கிரக் காட்சியைப்பார்க்க நேரிட்டது நிலைகுலைந்து போனார் இந்தக்காட்சியைப்பார்த்து விட்டு சேனலை மாற்றலாம் என்றால் ரிமோட் கைக்கு எட்டியத்தூரத்தில் இல்லை வேறு வழியில்லாமல்
ஓடிபோய் தொலைக்காட்சியினையே நிறுத்திவிட்டாரம் அதற்குள் 10 வயது நிரம்பிய அவர் மகனும் 15 வயது நிரம்பிய அவர் மகளும்

பார்த்து விட்டனர். ஒரு நிமிடம் தடுமாறி விட்டாரம் பிள்ளைகளும் தாயும் கொஞ்சம் நேரம் ஹால் பக்கமே வரவில்லை 10 வயது நிரம்பிய அவர் மகன் இவரைப்பார்த்துக்கேட்டனாம் அப்பா அந்த பெண்மணியை அந்த நபர் என்ன செய்தார் இவர் பதில் சொல்ல முடியாமல் விக்கித்து நின்று விட்டார் என என்னிடம் பயண நடுவிலே வேதனையுடன் கூறிவிட்டு நான் இதற்கு என்ன பதில் என் மகனிடம் சொல்ல முடியும்.... என என்னைக்கேட்டார் என்னாலே அவருக்குப் பதில் சொல்ல முடியாமல் வாய் மூடி இருந்தேன் .. இந்த மாதிரியான அசாதரண சூழ்நிலை கடந்த இரு தினங்களாக தமிழ் நாட்டின் பெரும்பான்மை குடும்பங்களில் நடந்திருக்கும். சன் நிறுவனம் சமுதாய அக்கறை என்ற போர்வையில் அக்கிரமங்களை அம்பலப்படுத்துகிறோம் என நினைத்துக்கொண்டு வக்கிரக் காட்சிகளை வீடுகளுக்குள் திணித்திருக்கிறது. .

இந்த மாதிரியான நபர்களின் செயல்களால் இந்துமததின் மாண்புளும் பெருமைகளும் களங்க மடையாது காரணம் இவர் ஒன்றும் இந்து மதத்தின் பெரிய சாமியாரும் இல்லை ஒட்டு மொத்த இந்துக்களின் பிரதிநிதியும் இல்லை... சாதரண ஆன்மிக மக்களின் மனம் கொஞ்சம் பதறும் அவ்வுளவுதான். இதனால் இந்து மதத்திற்கு எந்த பாதிப்பு இல்லை. பத்திரிகைகளும் தொலைக்காட்சி நிறுவனங்களும் தான் தேவையில்லாம் தூக்கி வைத்து இவரைக்கொண்டாடியது அதேப் பத்திரிகை உலகமும் தொலைக்காட்சி நிறுவனங்களும் தான் இப்போது மிதிக்கிறது....என்னைப்போன்ற சாமான்ய மக்களோ ஊடகங்கள் கொடுக்கும் முக்கியத்தைப்பார்த்துவிட்டு இவரைபோன்ற நபர்கள் தான் ஆன்மிகத்தை காப்பாற்ற அவதாரம் எடுத்தவர் என நம்பி அவர் பின்னால் செல்கிறார்கள் துக்ளக் ஆசிரியர் திரு.சோ அவர்கள் சொல்வதைப்போல " எதைத் தின்றால் பித்தம் தெளியும்" என்ற மனநிலையில் சில மக்கள் இருப்பதால் இவரைப்போன்ற நபர்கள் குறுகிய காலத்தில் பிரபலம் அடைந்து விடுகிறார்கள்... ஊடகங்களும் இவரைப்போன்றவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை முறையினை பரப்பரப்பு செய்திகளை வெளியிடுகிறோம் என நினைத்துக்கொண்டு வக்கிர காட்சிகளை ஒளிபரப்புகிறது இதனால் சமூகத்தில் எதிர்விளைவுகள் உருவாகும் என்ற சமூக அக்கறை துளியும் இல்லாமல் செயல் படுகிறது. ஒரே நாள் முழுக்க ஒரு காட்சியை ஒளிப்பரனதோடு மட்டுமில்லாது அந்த காட்சியை இரண்டு மூன்று நாட்கள்
தொடர்ந்து ஒளிப்பரப்பவேண்டும் என்ற நோக்கில் செய்திகளை தயாரித்து ஒளிப்பரப்பியது..

.. நான் அந்த சாமியார் என சொல்லிக்கொள்பவருக்கு வக்காலத்து வாங்குகிறேன் என நினைக்கலாம் ஆனால் என் நோக்கம் அது வல்ல அவர் தவறு செய்தார இல்லையா என்பதல்ல என்னுடைய வாதம் அவர் தவறே செய்திருக்கலாம் தனி மனித ஒழுக்கத்தை உலகத்துக்கு சொன்னவர் தன் வாழ்வில் கடைப்பிடிக்காமல் இருக்கலாம் அதற்காக அந்த ஒரு நிகழ்வை நாட்முழுவதும் ஒளிபரப்பி அதி முக்கியத்துவம் ஏன் கொடுக்கவேண்டும் ஒரு வேளை சன் நிறுவனத்துக்கும் அந்த நபருக்கும் தனிப்பட்ட விறுப்பு வெறுப்பு இருக்குமோ என சந்தேக மாக இருக்கிறது... எனவே ஊடகங்களுக்கு என்னைப்போன்றவர்களின் வேண்டுகோள் என்னவென்றால் தயவு செய்து
பரப்பரப்பு செய்திகள் என்ற போர்வையில் இதைப்போன்ற அபத்தமான காட்சிகளை ஒளிப்பரப்பி மனிதமனங்களில் சலனத்தை ஏற்படுத்தாதீர்கள் குறிப்பாக பிஞ்சு உள்ளங்களிடம் நஞ்சைப் பரப்பாதீர்கள்.

மகளிர் இடஒதுக்கீடும் நானும்...

பாரதியின் கனவும் கவிதையும் நனவாகி இருக்கிறது....

நல்ல விசயம் தான் நான் கொஞ்சம் மாறுபட்ட கண்ணோட்டத்தில் பார்க்கிறேன்

நல்ல விசயம் நடந்திருக்க்கிறது ஆனால் பயம் இன்னும் அகல வில்லை

பாரத அரசியலில் மூன்று பெண்களை நம் அரசியல்வாதிகளால்(ஆண்கள்) சமாளிக்க முடியவில்லை

ஒருவர் நம்மூர் ஜெயலலிதா இன்னொருவர் மாயவதி மற்றோருவர் மம்தா பானர்ஜி...

கக்க கக்க போ....இனி பாராளுமன்றம் இனி என்னப்பாடுபடப்போகிறதோ! அங்கேயும் துரைமுருகன்களும் செல்விகளும் உருவாமாகல்

இருக்கட்டும். இடஒதுக்கீடு இல்லாமல் ஒரு சபாநாயகர்(திருமதி.மீரா குமார்) ஒரு மக்களைவை எதிர்க்கட்சி த் தலைவவி

(திருமதி.சுஷ்மாஸ்வராஜ்) ஒரு தமிழக எதிர்க்கட்சித்தலைவி(செல்வி.ஜெயலலிதா)...ஒரு இரயில்வே அமைச்சரும் வங்காளத்தின்

செஞ்சட்டைகளின் சிம்மச்சொப்பனமாகவும் விளங்கும் ஒரு தலைவி(செல்வி.மம்தா பான்ர்ஜி) உ.பி முதல்வர் செல்வி.மாயவ்தி, காங்கிரஸ்

கட்சியின் செய்தித்தொடர்பாளர் திருமதி.ஜெயந்தி நடராஜன் உமா பாரதி போன்றோரை நம் நாட்டுக்கு அறிமுகப்ப்டுத்தியிருக்கிறது.

இந்திரா கந்தி ,சோனியா காந்தி, கனிமொழி ,கீதா ஜீவன், பூங்கோதை ,ஷீலா தீட்சித், வசுந்தர ராஜே சிந்தியா பிரியங்கா போன்றோரெல்லாம்

குடும்ப ஒதுக்கீட்டி உள் புகுந்தவர்கள்.இவர்கள் மேற்கூறிய பட்டியலில் இடமில்லை. இந்த இடஒதுக்கீட்டின் நோக்கத்தில் பழுதில்லை

ஆனால் நடைமுறையில் வாரிசு ஒதுக்கீடும் குடும்பஒதுக்கீடும் தான் கூட்டு சேர்ந்து கும்மிஅடிக்கும். சும்மா சொல்லவில்லை

உள்ளாட்சியில் ஒதுக்கீடு கொண்டுவந்தார்கள் என்ன நடந்தது அரசியல் வாதிகளின் ம்னைவிகள் மகள்கள் மரும்க்கள் பேரன் பேத்திகள்

என அனைவரும் பல நகராட்சிகளையும் மாநகராட்சிகளையும் பதவிகளால் அலங்கரித்தார்கள்.... ஏன் அரசியல்வாதிளின்

கைப்பாவைகளாகத்தான் இன்றளவும் செயல் பட்டு வருகின்றனர்... அவர்கள் காட்டுகின்ற இடங்களில் மட்டும் கையெழுத்துப்போடும்

வேலைகள் மட்டும்தான் தாய்க்குலங்களின் வேலை....இந்த நிலமைதான் பாரளுமன்ற சட்டமன்ற பெண் உறுப்பினர்கள்(மகளிர்

இடஒதுக்கீடு மசோதாவினால்) நடக்குமோ என உளப்பூர்வமாய் அய்யம் ஏற்படுகிறது. மொத்ததில் 33% இடஒதுக்கீடு என்பது

அரசியல்வாதிகளின் குடும்பங்களிலிருந்தும் அவர்களின் தொடுப்புகளின் குடும்பங்களிலிருந்தும் வரப்போகிறார்கள்

பட்டது இளவரசர்களைப்பார்த்த நாம் இனி பட்டத்து ராணிகளையும் மகாராணிகளையும் பார்க்கப்போகிறோம்

ஆண்வாரிசுகள் மட்டும்தான் அரசியலில் குதித்து கோடிகளை சுருட்ட வாய்ப்புக்கிடைத்த நிலை மாறி பெண்வாரிசுகளுக்கும்

ஒரு அரிய வாய்ப்புக் வழங்கபடவுள்ளது நம் அரசியல் சாஸனம் ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும்

இல்லை இவையெல்லாம் நடக்கப்போவதில்லை குப்பம்மாளும் சுப்பாமாளும் முனியம்மாளும்(சாதரண எந்த அரசியல்

பின்புலமில்லாமல் வரவாய்பிருக்கிறது என நினைத்தால் நான் அவர்களிடத்தில் மனப்பூர்வமாய் மன்னிப்பு கோருகிறேன்.

உண்மையிலே நோக்கம் நிறைவேற வேண்டும் எனற ஆவல் எனக்குமுண்டுதான் நம்மால் ஆசைப்படமட்டும்..முடியும் என்ன செய்ய......

அது சரி....

முதலில் 1992 முதல் கிட்டத்தட்ட 18 ஆண்டுகள் ஆறப்போடப்பட்ட மகளிர் மசோதா , திடீரென அவைக்கு வந்த்ததன் காரணம் என்ன ?

மகளிர் மசோதா!!!! இராஜ்ஜியசபையில் (பின்புறமாக பாரளுமன்றம் வருதல் என்பார்கள் - படித்தவர் அவை என்றும் சொல்லப்படும்)மட்டுமே நிறைவேறியுள்ளது. படித்தவர் அவையில் நிறைவேறியது பாமரர் அவைக்கும் வரட்டும்.

இராஜ்ஜியசபையில் உறுப்பினர் என்பது நியமனம் செய்வது.- அதில் 33% சிக்கல் வராது.
மக்களவை என்பது இந்திய குடிமக்களால் நல்ல/கள்ள ஓட்டில் முடிவு செய்வது. அதில்தான் சிக்கலே. பார்க்கலாம்.
இராஜ்ஜியசபையிலேயெ லல்லுவும், முலயாமும் செய்த ரகளை மன்மொஹனாரை மிரட்டியுள்ளது.மக்களவையில் பார்ப்போம்.

அதுசரி.... மகளிரின் 33% ல் பழங்குடியினர்பெண்ணுக்கும், திருநங்கைகளுக்கும் 1சதவிகிதம் ஒதுக்கப்படவேண்டும் என கோரிக்கை வந்தது ஒரு சமயத்தில். அது பற்றி ஏதும் விளக்கம் உண்டா??????.

நேற்று இரவு தூர்தர்சனில் இந்த மசோதா குறித்த விவாததங்கள் காட்டப்பட்டன. அதிலிருந்து.
ஒரு நல்ல விசயம் நடந்தது : இந்த மசோதாவில் ஆயிரம் குறைகள், குதர்க்கங்கள் சொல்லி வந்த (1998 முதலே) செஞ்சடைக்காரர்கள் பிரச்சினை இன்றி ஆதரித்தது. நன்றி: பிருந்தா கரத்.

கட்சி பாகுபாடின்றி மகளிர் உருப்பினற்கள் கை கோர்த்தாலும், சுஷ்மா சுவராஜ், பிருந்தா கரத் ஆகியோரிடம் இருந்த ஆரோக்கியமான உணர்வு, மற்றவர்களின் பேச்சில் இல்லை. ஜெயந்தி நடராஜன் அதனை UPA அரசாங்கத்தின் வெற்றி என்றார்.
காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் என்பதனை நிரூபித்தார்.மம்தா சுருக்கமாக "வெல்கம்" என்றார்.

மன்மோகனார் எழுதி வைத்தி படிப்பதை விடமாட்டாரா???????????

சன் திரை விமர்சனம் பாணியில் : மகளிர் மசோதா!!!! குழாயடிச்சண்டை
மா.பொ

தீபாவளி....

பகவனே நீ தசாவாதாரமாய்...........

தரணியில் மீண்டுமென்றுவதரிப்பாய்

அன்று நீ..................

தர்மம் காக்க அதர்மம் அகற்ற

அகிலத்தில் அவதரித்தாய்

அதர்மசக்தியாம் அசுரனையுமழித்தாய்

தீயவனை நீயழித்த நாள் முதலாய் நாங்களும்

வண்ணவிளக்குகளை வீதியெங்குமேற்றி

வாணவேடிக்கைகளும் புத்தாடைகளும்

விதவிதமான பலகாரங்களுமாய்- இன்றும்

தரணியெங்கும் நாங்கள் பல்லாண்டுகாலமாய்

கொண்டாடுகின்றோம்.......சந்தோஷம் தான் - ஆனால்

நீ வாழும் உறைவிடமும் உனக்காய் எம்முன்னோர்கள்

வாரி வழங்கிய செல்வங்களனைத்தும் அரசாங்காங்களின்

அசுரப்பிடியில் ஆட்பட்டிருக்கிறது......

மதசார்பற்ற அரசென சொல்பவர்ள்

ஆலயங்ளின் சொத்துகளிலும் வருமானங்களிலும்

ஆலாய் பறக்கிறார்கள் இன்றும் புரியவில்லை

நாங்கள் வேண்டுதலாய் மொட்டைப்போடுகிறோம்

ஆட்சியாளர்களோ உன்னையே மொட்டை அடிக்கிறார்கள்

உன்னைத் தரிசிக்கப்பணம் வசூலிப்பவர்கள்

உன் உண்டியலிலும் கைவைக்கிறார்கள்.....

ஆட்சியில் மட்டுமா கொள்ளை அடிக்கிறார்கள் - உன்

ஆலயத்திலும் அல்லவா கொள்ளையடிக்கின்றார்கள்

கொள்(ளை)கை மறவர்கள்........

தட்டில் பணம் போட்டால் தான்

தடங்கலில்லா உன்னை தரிசிக்க முடியும்

அகிலத்தை காலால் அளந்த உனக்கு

ஆறுகால பூஜைகளெல்லாம் ரேஷன் முறையில்

நடத்துகின்றனர் நல்லாட்சி(?)யாளார்கள்

உன் வருமானத்தை வாரிவிழுங்கும்

உன்னைத் தரிசிக்க வரும் அடியார்களுக்கு

அடிப்படை வசதிக்கூட செய்ய முயலவில்லை

உன் கருவூலத்தில் கைவைப்பவர்கள்

பெருமைகளையும் மகிமைகளையும்

எடுத்துரைக்க என்ன வழிசெய்கிறார்கள்.

உன் திருநாமத்தையாவது சொல்லிக்கொடுக்க முயலவில்லை

மக்களெல்லாம் நின் பெருமை யறியாது

அறியாமையினால் அணி மாறுகிறார்கள் ஆங்காங்கே

அடியார்கள் அணிமாறாமல் இருந்தால்தான்

உண்டியல் நிறையும் இல்லையேல்

அரசு கருவூலங்களில் காற்றுத்தான் இருக்கும்

சாமியில்லையென்பார்களாம் ஆனால்

சாமியின் காசில் வயறு வளர்ப்பார்களாம்

பங்கு வைப்பதுதான் பகுத்தறிவோ என்னவோ...

பகவானே.....

தர்மம் காக்க அதர்மம் அகற்ற

அகிலத்தில் மீண்டும் என்று நீ அவதரிப்பாய்

ஆலயங்களைவிட்டு அரசினை என்று

அடித்து விரட்டுவாய்........

சித்திரைத்திங்கள்....

சித்திரைத் திங்கள்.....

தமிழர் எங்களின் தமிழ் புத்தாண்டு

தமிழ் தமிழன் என்று தமிழ்த் தாயே

உன்னை ஏமாற்றி உன் புத்தாண்டை

மரபுகளையெல்லாம் மீறி யார் மாற்றினாலும்

சித்திரை திங்களே... தமிழ்த் தாயே......

எங்கள் மனதில் என்றும் நீ தானம்மா

சித்திரைத் தாயே உன் முதல் நாள் தான்

எங்களின் புத்தாண்டு தினம்......

பாட்டன் முப்பாட்டன் காலமாய்

வாழையடி வாழையாய்

நாங்கள் கொண்டடாடிய புத்தாண்டு

சித்திரைத் திங்கள் முதல் நாள் தான் - அதனை

தமிழ் தமிழன் என்று சொல்லி

அரசியல் பிழைப்புக்காய்

அரசியல் வியாபாரிகள்(தமிழ்) சிலர் சேர்ந்து

அரசாணைப் போட்டு புத்தாண்டு தினத்தை மாற்றினால்

மாறிடுமா நம் நாட்டின் மரபுகள்......

தமிழ் நாட்டின் மரபுகள்......

நாள்க்காட்டியில் வேண்டுமானால் மாற்றி விடலாம்- ஆனால்

மக்கள் மனங்களில் மாற்றமுடியுமா?

தமிழ் தமிழன் என்று சொல்லி பிழைப்பவர்கள்

தமிழ் புத்தாண்டு தினத்தை மாற்றியவர்கள்

தங்களின் பிறந்த நாளை மட்டும்

ஆங்கில மாதத்தை பின்பற்றி

வீதியெங்கும் விழா நடத்துகின்றனர்... கேட்டால்

எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்பார்கள்

அரசாணைகள் கூட அன்னியமொழியில் தான்

அலங்கரிக்கிறது நம் நாட்டில்.....

நம் நீதி மன்றங்களில் கூட வழக்காடும் மொழி

ஆங்கில மொழிதான் அலங்கரிக்கிறது ...

குப்பனுக்கும் சுப்பனுக்கும் புரிகின்ற தாய் மொழியை

புறந்தள்ளி விட்டு புறக்கணிக்கிறார்கள்

நம் தாய் மொழியை

சிரிப்புதான் வருகிறது................

என்று மாயும் இந்த மாய பற்று.......

என்று அழியும் இந்த மாயக் கூட்டம்

என்று எம் அன்னைத் தமிழ்

அரியணையேறிடுவாள்......

நேர்ச்சை மற்றும் கானிக்கை...

நண்பர்களே எனக்கு வந்த ஒரு மின்னஞ்சலை மையமாக வைத்து என்னுள் தோன்றிய சில எண்ணங்கள்

இறைவனுக்குப் படைக்கின்ற உணவுகள் எல்லாம் படைப்பவன் மட்டும் சாப்பிடுவதில்லை..

நம் பாரதக்கலச்சாரப்படி பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் ஆம் தன் சுற்றத்தார் ஏழைகள் அனைவருக்கும்

அதனை பரிமாறி மகிழ்வான் இன்றும் பல கோவில்களில் அன்னதான மண்டபங்களில் மிகச் சிறப்பாக அன்னதானங்கள் நடக்கிறது

எனவே இறைவனுக்கு படைக்கின்ற உணவு மக்களுக்குத்தான் பயன் படுகிறது.... ஆகவே நம் முன்னோர்கள்

காரண காரியங்கள் இல்லாமல் எதுவும் செயல் படுத்தமாட்டார்கள்

அடுத்தது முடிககாணிக்கை செலுத்துவது , ஒரு பக்தன் தன்ணுடைய அழகியல் தன்மையைவிட்டு இறைத்தன்மைக்காய்

தன் முகப்பொலிவையையும் துறப்பதற்கு தன் மனநிலையை மாற்றுகின்றான். இது ஒரு அர்ப்பண பாவமுறை.... ஒரு வித நம்பிக்கை

அதே நேரம் முடிக்காணிக்கையால் சமுதாய நன்மையும் இருக்கிறது.. எ.கா....

திருப்பதியில் நாம் கொடுக்கின்ற முடிக்காணிக்கையால் கிடைக்கின்ற ஆண்டு வருமானம் சுமார் ரூ500கோடிக்குமேல்

இப்பணம் எங்கே போகிறது தெரியுமா ஆந்திரவின் அரசாங்க கஜனாவிற்குதான் இந்தபணமூலம் நல்ல பல திட்டங்கள்

அரசாங்கத்தால் தீட்டப்பட்டு ஏழைகளை சென்றடைகிறது. இங்கே பழனியிலும் திருச்செந்தூரிலும் இதுதான் நடக்கிறது...

வேளங்கண்ணி மாதக்கோவிலிலும் கேரளா மாநிலம் இடத்துவா கிறிஸ்துவ ஆலயத்திலும் முடிகாணிக்கை செலுத்தும் முறைகள்

உண்டு(அங்கு வருகின்ற வருவமானம் அரசு கஜனாவிற்கு போவதில்லை அது வேறு விசயம்) ...


இந்து ஆலயங்களில் சமர்ப்பிக்கின்ற காணிக்கைகள்(பல ஆயிரம் கோடிகள் )அனைத்தும் அரசாங்க கஜனாக்களுக்கே சென்று

சேர்கின்றன... குறிப்பாக திருப்பதி வருமானம் தான் ஆந்திராவின் பட்ஜெட்டின் முக்கியமான நிதி ஆதாரம். சபரி மலையின்

வருமானம் கேரளா அரசின் முக்கிய நிதி ஆதாரம்... ஆகவே கடவுள் கேட்டாரோ இல்லையோ காணிக்கை செலுத்தும் முறையில்

தவறு இல்லை... அப்பணத்தால் ஏழைகள் தான் பயன் பெறுகிறார்கள். எல்லா மத வழிபாட்டு தலங்களிலும் காணிக்கை செலுத்தும்

முறை உள்ளது. சில வழிபாட்டு தலங்களில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் கட்டாய காணிக்கை செலுத்தும் முறைகள்க்கூட இருக்கிறது.

இவை அனைத்து செயல்களும் எந்தக் கடவுளும் கேட்டதால் நாம் செய்வதில்லை..... கடைசியாக...

ஒரு நாத்திகர் ஒரு ஆத்திகரிடம் ஒருக் கேள்விக்கேட்டார்.....உலகத்தில் உள்ள கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும், இந்துக்களும்

தவறாமல் பிரார்த்தனை செய்கின்றனர்.இவர்கள் அனைவரும் தங்களுக்காகவும் தங்கள் சார்ந்த சமுதாய முன்னேற்றங்களுக்காய்

பிரார்த்திப்பார்கள். ஆனால் இந்த உலகில் இன்றும் ஏழ்மை,அறியாமை, பசிக்கொடுமை, கொடும்நோய்கள், பஞ்சம் பட்டினி

தீவிரவாதம்,வன்முறை, பலியல் வல்லூறுகள் என பல்வேறு பிரச்சினைகள் இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. உலகில்

ஒருவேளை உணவுக்கு வழியில்லாதவர்கள்...25% பேர்..... சர்வ வல்லமை வாய்ந்த இறைவன் உங்களின் பிரார்த்தனையால் ஒரே

நாளில் மேற்சொன்ன அனைத்து பிரச்சினைகளையும் ஒரே நோடியில் தீர்த்து விடலாமே.... எனக்கூறி ஒரு ஏளன பார்வைப்

பார்த்தால் இந்த ஆத்திகரோ புன்ம்றுவலோடு... கீழ் கண்டவாறு சொன்னார்...

எல்லாரும் பிரார்த்திக்க்றார்கள் யாரும் தங்கள் மதம் கோட்பாடுகளுக்கு தக்கப்படி வாழவில்லை.... அனைவரும் குளிர்சாதனப்

பெட்டியிலுள்ள குளிர்பானங்களைப்போல் வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள் சற்றே விளக்கமாகச் சொன்னால்.. குளிபானங்கள்

அனைத்தும் குளிர்சாதனப்பெட்டியிலுள்ளவரை குளிர்ச்சியாக இருக்கும் அதைவிட்டு வெளியே வரும் போது அதன் தன்மை மாறி

விடும்....அதேப்போல நாமும் பிரார்த்திக்கும் போதும் புனித நூல்களை படிக்கும் போதும்வழிபாட்டுத்தலங்ளிலும் ஒரு ஆன்மீக

பிள்ம்பாக மாறி விடுகிறோம் அந்நிலையில் இருந்து மாறி சாதரண நிலைக்கு வரும்போது அங்கே பிரார்த்தித்ததும் படித்ததும்

மறந்து விடுகிறோம்.கீதையில் கண்ணன் சொல்கிறார் கர்மத்தைச்செய் பலனை எதிர்பாராதே... நம்மில் எத்தனைப்பேர்

கடைப்பிடிக்கிறோம்...பைபிலில் உன்னை நேசிப்பதுப்போல் உன் அயலானையும் நேசி என்று சொல்லபட்டிருக்கிறது... நம்மில்

எத்தனைப்பேர் கடைப்பிடிக்கிறோம்குரானில் உன்னில் இருப்பவற்றில் இல்லாதவணுக்கும் கொடு நம்மில் எத்தனைப்பேர்

கடைப்பிடிக்கிறோம் ..... என அனைவரும் அவரவர் மத அறிவுரைப்படி வாழ்ந்தால் மேற்சொன்ன பிரச்சினைகள் அனைத்தும்

உலகில் ஒருநொடியில் முடிவுக்கு வரும்.. ..... என பதிலளித்தார் அந்த பெரியவர்........

எனவே நம் முன்னோர்கள் நமக்கு வகுத்தளித்ததில் தவறு ஒன்றும் இல்லை .....


மேலே சொல்லப்பட்டவை என் எண்ணத்தின் வண்ணங்களே அன்றி வேறு எந்த உள் நோக்கவும் கிஞ்த்தும் இல்லை





- மா.பொ...

என் எண்ணக்கிறுக்கல்கள்

சமுதாயம்


அரசியல்வாதிகள் அனைவரும்(ஒரிருவர்களைத் தவிர) ஊழல் பேர்வழிகள் இலட்சக்கணக்கான கோடிகளை நாட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் பதுக்கி வைத்திருக்கிறார்கள். நாட்டின் ஒட்டுமொத்த குண்டர்களில் ,சமூகவிரோதிகளில் பாதிக்கும் மேற்பட்டவர்கள்
அரசியல்வாதிகளின் கண்ணவசைப்பிற்கு ஏற்ப செயல்படுபவர்கள். தேர்தல் காலங்களிலும் முழுவேலைநிறுத்த நடைபெறும் போதும் இவர்களின் சமுதாயத்தொண்டுகள் தேவைப்படும் நம்மூர் அரசியல் வாதிகளுக்கு, எனவே அரசியல் வாதிகளும் தொ(கு)ண்டர்களும்
ஒட்டிப்பிறந்த இரட்டைக்குழந்தைகள் ஆகிவிட்டனர். மக்களாகிய நாமும் வேதனையோடு வேடிக்கைப்பார்க்கின்றோம்.....

அதிகார அத்துமீறல்களால் பணபலத்தால் செயற்காயாய் தயாரிக்கப்பட்ட வெற்றிகள்.... கட்சிகளெல்லாம் கார்ப்பரேட் கம்பனிகள்போல மாறிவருகின்றன கட்சிகளின் தலைமைக்கு கோடிகள் கப்பம்கட்டினால்தான் வேட்பாளர்க்ளாக களத்தில்குதிக்கமுடியும் இதுதான் இன்றய நம் நாட்டின் நிலை...... இதனால் சமூகவிரோதிகள் கையில் சிலகோடிகள் இருந்தால்..


அரசியலைபுனிதம் என நினைத்துப்பணியாற்றிய பெருமக்கள் இடம்பெற்ற நம் மக்களவையில் அவர்களும் உறுப்பினர்ஆகிவிட முடிகிறது இவர்களிடமும் நாம் நீதி நேர்மையை எதிர்ப்பார்க்கிறோம் என்ன செய்ய.......

அடுத்து அரசு அதிகாரிகள் மற்றும் அரசு ஊழியர்கள்....


இவர்கள் ஏதோ வானத்திலிருந்து குதித்தவர்களைப்போல செயல்படுகிறார்கள் இலஞ்சம் இல்லா அரசு அலுவலகங்கள் இருந்தால் அது உலக அதிசியம் என்கிற நிலமை... ஒருக்கால் இலஞ்சம் வாங்கத அதிகாரிகளோ அரசு ஊழியர்களோ இருந்தால் பிழைக்கத்தெரியாதவன் என்ற சமுதாயப்பார்வை.... கூடவே அவரை எதிலாவது மாட்டவைக்க காத்திருக்கும் அதிகார வர்க்கம்...

எல்லா அரசு ஊழியர்களுக்கும் சங்கங்கள் இருக்கின்றன... அதில் பெரும்பான்மையானவை இடதுசாரி சார்புடைய சங்கங்கள் தான் இடது சாரிகளோ ஊழலை ஒழிப்பதற்கு மொத்தகுத்தகைக்காரர்கள் போல் பேசுபவர்கள்(அம்மாவின் மற்றும் லல்லுவின் ஊழல்கள்
அவர்களுக்கு விதிவிலக்கு) ஆனால் எந்த ஒருசங்கங்களிலும் இலஞ்சம் வாங்க மாட்டோம் என்றோ கூடாது என்றோதீர்மானமாகவோ அல்லது விதிமுறைகளாவோ ஏற்றுக்கொள்ளப் பட்டுள்ளதாகவோ செய்திகள் இதுவரை இல்லை..

சுருங்கச்சொன்னால் பிறப்பு முதல் இறப்பு வரை இலஞ்சம் தலைவிர்த்தாடுகிறது..... இதில் ஏழைகளும் நடுத்தரவர்க்கத்தினரும் அதிகம்
பாதிக்கப்படுகிறார்கள்......அரசு அலுவலர்களிடம் மட்டும் தவறு இல்லை தவறு நம்மிடமும் தான் இருக்கிறது விதிகளை மீறி காரியங்கள் சாதிக்க நினைப்போம்........ ஆகவே இலஞ்சம் கொடுக்கும் நாமும் சமுதாய வியாதிக்காரர்களே.....


அடுத்தது.... காவல்துறை........

இப்பொழுது காவல்துறை ஏவல்துறை ஆகிவிட்டது.........சட்டவிரோதிகள் சட்டங்களை கையெலெடுத்தால் கைக்கட்டி வாய்மூடி மெளனமாய் நிற்பார்கள்....கொஞ்சம் பணவும் அதிகாரபலவும் இருந்தால் எப்படி வேண்டுமானாலும் காவல்துறையினை கைக்குள்
போட்டுக்கொள்ளமுடியும்.....என்கிறநிலைமைதான் நாடு முழுவதும்... அதற்கு ஒரு உதாரணம் கடந்த சில வருடங்களுக்கு முன்


கேராளவில் நடந்த ஒரு உண்மை நிகழ்ச்சி இது......திருவனந்தபுரம் தொலைத்தொடர்பு அதிகாரிக்கெதிராக போடப்பட்ட வழக்கில் காவல் துறையின் அதிகார அத்துமீறல்கள் வெளிச்சம் போட்டுக்காட்டியது... அதாவது அந்த அதிகாரிக்கும் பக்கத்து வீட்டு பணம் படைத்த ஒருவருக்கும் நடந்த நிலப் பிரச்சினையில் இந்த அதிகாரி அவர்களால் போடப்பட்டிருந்த முள்வேலியை சேதப்படுத்தியதாகவும் பக்கத்து வீட்டுக்காரரை காலால் எட்டி உதைத்ததாகவும் தடுக்க வந்த அவருடைய துணைவியாரை பெண் என்றும் பாரமல் காலல் அப்பெண்ணின் மார்பில் எட்டி உதைத்ததாகவும் காவல் துறையினர் முதல் தகவல்
அறிக்கையில் பதிவு செய்தனர். இதில் வேடிக்கை என்ன வென்றால் காவல் துறையிடம் புகார் மட்டுமே அவர் அளித்தார் ஆனால்
காவல் துறையின வழக்கினை பலப் படுத்துவதற்காக இவர்களாகவே பல கதைகளை புனைந்தார்கள்... அதிகாரியும் கைது நடவடிக்கைக்குப் பயந்து தலைமறைவு ஆனார். முடிவில் வழக்கு நீதி மன்றம் வந்தது நீதிபதியோ கைது ஆணைப்பத்திரம் (Arrest Warrant) வழங்கினார்.... வேறு வழியில்லாமல் அதிகாரி நீதி மன்றத்தில் கீழடங்கினார் (சரணடைந்தார்)நீதிபதிக்கும் அங்கிருந்தவர்களுக்கும் ஒரே அதிர்ச்சி காரணம் யார் காலல் எட்டி உதைத்தார் என காவல்துறையினரால் முதல் தகவல் அறிக்கைபதிவு செய்யப்பட்டதோ அந்த அதிகாரிக்கு கால்களே கிடையாது ஆம் அவர் ஒரு பிறவி ஊனம் சக்கர நாற்காலி இல்லாமல் அவரால் நகரவே முடியாது..........இது ஒருப்பானைச் சோற்றுக்கு ஒரு உதாரணம்.... சமீபத்தில் சட்டக்கல்லூரி வளாகத்தில் கல்லூரி மாணவர்கள் ஒருவரை ஒருவர் கொடூரமாய் மாறிமாறி தாக்கும்ப்போது வாய்மூடி மெளவுனமாய் நின்றக் காட்சி நாம் மறந்து இருக்கமாட்டோம் அதேப்போல் உயர்நீதிமன்ற வளாகத்தில்வழக்கறிஞர்கள் மீது நடத்திய தாக்குதலையும் நாம் மறந்து இருக்க
மாட்டோம்..... இவ்விரு நிகழ்ச்சிகளும் பிரச்சினைகளிலும் காவல்துறையினர் அதிகாரவர்க்கத்தினரின் விருப்பு வெறுப்பிற்கு ஏற்றார்போல் செயல் பட்டனர். இப்படி காவல்துறையினரைப்பற்றி அடுக்கிக்கொண்டே போகலாம்........

அடுத்தது நீதித்துறை......


ஒரு ஐம்பதாயிரம் ருபாய் இருந்தால் நம் நாட்டின் முதல் குடிமகனாம் குடியரசுத்த்லைவருக்கு எதிராகக்கூட கைது ஆணைப்பத்திரம் (Arrest Warrant) நீதிமன்றங்களிலிருந்துப்பெறமுடியும்(போற்றுதல்குரிய நம்முடைய கலாம் அவர்களுக்கு எதிராக வாங்கப்பட்டது) என்ற நிலைதான்... பலவழக்குகள் கூட அதிகாரவர்க்கத்தால் நீதிமன்றங்களில் திசைமாறி பயணித்து இருக்கிறது இன்றும் பயணித்துக்கொண்டிருக்கின்றன....... நீதிபதிகளின் நியமனங்களில் கூட அரசியல் தலையீடுகள் இருக்கலாம்........... ஒருவர் தன் உரிமையியல் வழக்குக்காய்(Civil Case) நீதிமன்றங்களை நாடினால் அவர் நீதிக்காய் நீண்டகாலங்கள் காத்திருக்க வேண்டும் அதனால் நீதிமன்றங்களெல்லாம் நீண்டமன்றங்களாய் மாறி வருகின்றன இவ்வுளவு பெரிய மக்கள்த்தொகைக் கொண்ட நாட்டில் வழக்குகளின் எண்ணிக்கை அதிகமாகத்தான் இருக்கும் அதனால் நீதி
கிடைப்பதற்குத்தாமதம் ஆகும் தான் ஆனால் இதற்கு தீர்வு என்ன ? நடமாடும் நீதிமன்றங்களை நிறுவினோம் ஆனாலும் காலத் தாமதம் ஏற்படத்தான் செய்கிறது..... என்னத்தான் தீர்வு மக்கள் வளம் நிறைந்த நாட்டில் நீதித்துறையை சார்ந்தவர்களுக்காப்பஞ்சம்? நீதித்துறையில் பணியிடங்களை அதிகப்படுத்த முயற்சிக்கலாம் தானே.....நீதி ஏழைக்கும் நடுத்தர வர்க்கத்தினர்க்கும் என்றுமே
எட்டாக்கனிதான்.அரசியல் வாதிகள் செய்கின்ற ஊழல்களுக்கு எதிரானத் தீர்ப்புகள் பெரும்பாலும் நிரபராதிகள் எனத்தீர்ப்பு வழங்கப்படுகின்றன......... எந்த அரசியல்வாதிகளும் தண்டிக்கப்பட்டதாய் சரித்திரமில்லை அப்படி ஒருவேளைத்
தண்டனைக்கொடுக்கப்பட்டால் இருக்கிறது மேல்முறையீடு.. கோடிகள் கொள்ளை அடித்தாலும் தேசியக்கொடி தன் வாகனத்தில்
பளப்பளக்க பவனி வருகின்றனர் நீதி மன்றங்களின் தயவால். இது இந்நாளுக்கும் பொருந்தும் முன்னாளுக்கும் பொருந்தும்.....

ஆனால் குப்பனும் சுப்பனும் தவறு செய்தால் பறந்து வருகிறது தண்டணை இது ஏன் புரியவில்லை சுப்பனுக்கும் குப்பனுக்கு வழங்கும் தண்டனை ஏன் நீதி மன்றங்களால் நம் அரசியல்வாதிகளுக்கு வழங்கப்படுவதில்லை......வழக்கறிஞர்கள் காசும் அதிகார பலவும் இருந்தால் எத்தனைப் பெரியத் தவறுகள் செய்தாலும் வக்காலத்து வாங்குவார்கள்...வழக்கின் தன்மையைப்பற்றி அதில் உள்ள நீதி அநீதிகளைப் பற்றியோ கவலைப்படும் வழக்கறிஞர்கள் வெகு சிலரே....காசு செலவழித்தால் எத்தகைய வழக்காக இருந்தாலும் தன் வாதத்திறமையால் குற்றாவாளிகளை சட்டத்தின் முன்பாக தப்பிக்கச் செய்கிறார்கள் அதற்கு ஒரு உதாரணம்.... கடந்தசில வருடங்களுக்கு முன் ஒரு பல்கலை கழகத்தின் துணை வேந்தரின் ஒரே மகனான

திருநாவுக்கரசு என்ற மருத்துவக்கல்லூரி மாணவனின் கொலைவழக்கு நமக்கு அனைவருக்கும் நினைவு இருக்கும் என நினைக்கிறேன்.. ஜாண்டேவிட் என்கிற சக மாணவன் ராகிங் என்ற பெயரில் அறுவை சிகிச்சைக்குப் பயன்படும் கருவிகளின் துணையோடு திருநாவுக்கரசு என்ற மாணவனை கொலை செய்து கண்டம் துண்டமாக் வெட்டி கோணிபையினில் திணித்து பேருந்தில்
ஏற்றி சென்னைக்கு அனுப்பி விட்டான்..... ஆனால் வழக்கறிஞரின் வாதத்திறமையால் அந்தக்கொடூர மாணவன் குற்றவாளியில்லை என நீதிமன்றத்தால் தீர்ப்பு வழங்கப்பட்டது.....ஆனால் இன்று வரை திருநாவுக்கரசு எப்படி செத்தான் என்றோ ஜாண்டேவிட் கொலை செய்யவில்லையென்றால் வேறு யார் கொலைச் செய்தார்கள் என நீதிமன்றங்கள் இதுவரை தெளிவுப் படுத்தவில்லை...ஒருவேளை திருநாவுக்கரசு தன்னைத்தானே கொலைசெய்து கோணிப்பைகுள் நுழைந்து பேருந்தில் பயணித்தானோ என்னவோ என
நீதி மன்றங்கள் நினைக்கிறதோ?....... நல்ல வாதத்திறமை உள்ள வழக்கறிஞர் இருந்தால் எந்த வழக்கினையையும் எப்படி பட்டவர்களின் வழக்காக இருந்தாலும் வளைத்து விடலாம்.... என்ற நிலமைதான் இன்றும் நம் நாட்டில்.....

சுகாதரத்துறை........

உலகில் நாம் அனைத்துறைகளிலும் பின்தங்கி இருந்தாலும் சுகாதரசீர்கேட்டில் இன்னும் முன்னிலையில் தான் இருக்கிறோம்.....கூவம் நதியினை சுத்தப்படுத்துகிறோம் என காலங்காலமாய் ஆட்சிகள் மாறினாலும் அறிக்கைகள் மாறவில்லை கங்கை நதியினையும் பல்லாண்டுகாலமாய் சுத்தப்படுத்துவோம் என கூறிக்கொண்டிருக்கிறோம் ஆனால்
அரசாங்ககளின் கருவூலங்கள்தான் சுத்தமாயின குப்பைத்தொட்டி இருக்கும் ஆனால் நடந்து செல்வதற்கு சோம்பல் பட்டு வீதிகளில் வீசிகிறோம், தொற்று நோய்களின் மொத்தக் குத்தகை காரர்கள் ஆகி விட்டோம் மனிதக்கழிவுகளை மனிதனே அள்ளும் முறைகளும் சாக்கடை கழிவு நீர் நிலைகளில் இன்றும் நம் சகமனிதனே மூச்சடைக்கி இற மூழ்கி வேலைப்பார்க்கிறான்.. நிலவுக்குக் கூட நாம் ராக்கெட் விட்டாச்சு ஆனால் அரசு மருத்துவனைகளில் லஞ்சமில்லாமல்
பிணவறைக்குக்கூட செல்லமுடியாது,..... நோய்க்கு போதிய மருந்து இருக்காது அவசர நோயாளிகளை உதாசீனப்படுத்தப்படுதல்சரியான சிகிச்சை முறையில்லாமல் இன்றும் பல கர்ப்பிணிகள் உயிர் இழக்கும் சோகம் நடைப்பெற்றுக்கொடுதான் இருக்கிறது
அதிகார வர்க்கத்தினர்க்கு நட்சத்திர தரமுள்ள மருத்துவ சேவை இலவசமாகவே கிடைக்கிறது.....
பல அரசுமருத்துவமனகள் சுகாதர சீர்கேடுகளின் மொத்தகுத்தகையாக இருக்கிறது உலகத்தரம் வாய்ந்தது என்பார்கள் ஆனால் உருப்படியாய் எதுவும் இருக்காது.......... தாதியர்களின் சிடுசிடுப்பு சுகாதர சீர்கேடுகாள்..............எனப்பலப்பிரச்சினைகள்.........

கல்வித்துறை........
மாதிரிப்பள்ளிகள்(Matriculation or Model School) மலிந்ததனால் அரசுப்பள்ளிகள் ஆரவாரமில்லாம் களையிழந்து காணப்படுகிறது பல பள்ளிக்கூடங்கள் மாணவர்கள் இல்லாமல் மூடப்பட்டு வருகின்றன.... எதனால் இப்படி ஆனது ஆங்கில வழிப்படித்தால்தான்
சமுதாய அங்கிகாரம் எனும் நிலை... ஆசிரியர்களின் அலட்சியப்போக்கு தன் பிள்ளைகளை தரமான பள்ளிகளில் சேர்த்து விட்டு ஊரார் பிள்ளைகளின் எதிகாலத்தில் விளையாடிக்கொண்டிருக்கிறார்கள்... வகுப்பில் சரியாக பாடம் நடத்துவது இல்லை ஆனால்
தனியாக கட்டணம் வசூலித்து தனி வகுப்புகள் எடுப்பார்கள் வருடத்திற்கு வருடம் தேரிச்சி விகிதம் அதிகரிக்கிறதோ இல்லையோ ஆனால் சம்பள விகிதம் மட்டும் அதிகரிக்கிறது ஆட்சியாளர்களின் தயவால்..... மாணவசெல்வங்களின் அறிவுக்கண்ணைத் திறப்பதற்கு
பதில் அவர்களை தன் சுயநலத்திற்காய் தன் சொந்த வேலைகளைக்கூட செய்யப்பணிக்கிறார்கள் இன்னும் சில கிராமங்களில்...
ஏழைக்குழந்தைகள் மாநகாரட்சி மற்றும் அரசு பள்ளிகளில் படிக்க அப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் குழந்தைகள் தரம் வாய்ந்த தனியார்ப்பள்ளிகளில் பயில்கின்றனர்.. உணவுவிடுதி நடத்துபவர் தன் விடுதியில் உணவு உட்கொள்ளாமல் பக்கத்து விடுதியில் உண்பதற்கு ஒப்பாகும் இது... ஆசிரியர்களின் குழந்தைகளும் அரசு பள்லிகளில் படிக்கும் நிலமை எப்போது வருகிறதோ அப்போழுதுதான் அரசு பள்ளிகளின் தரம் உயரும் அரசு பள்ளிகள் தரம் கெடுவதற்கு மக்களாகிய நாமும் ஒரு காரணம் தான்... அரசுப்பள்ளிகளின் அவல நிலைகளால் தனியார் பள்ளிகள் மீது மோகம் கொண்டோம்.... அதன் விளைவு கல்வி யாபரப்பொருளானது பள்ளிகளின் அமைவிடத்தைப்பற்றி பெருதாக கவலைப் படவில்லை நாம் பள்ளிகள் நிறுவும் போது கடைப்பிடிக்க வேண்டிய சட்டத்திட்டங்களை அரசு அதிகாரிகளின் ஆசியோடு காற்றில் பறக்க விட்டதன் விளைவுதான் சமீபத்தில் கும்பகோணத்தில் நூற்றுக்கணக்கான பிஞ்சுக் குழந்தைகளை தீக்கிரையாக்கினோம் கும்பகோணத்தில்..........கல்வி இன்று பாரப்பொருளாகிவிட்டது..... உலகத்திற்கே கல்வி சாலைகள் பல அமைத்து இலவசமாக கல்வியை வாரிவழங்கிய நம் நாட்டில் கல்வியை வியாபரப்பொருளாக்கிவிட்டோம்.. அன்று பச்சையப்பவள்ளலும் அண்ணாமலைச்செட்டியாரும் போன்றவர்கள் பலகல்விசாலைகளை நிறுவி தொண்டுள்ளத்தோடு செயல் பட்டனர் ஆனால் இன்று கள்ளுந்தைகளும் குண்டர்களும் அரசியல் வியாபாரிகளும் கல்வித் தந்தையர் வேடம் பூண்டுள்ளனர்.

மேலச் சொல்லப்பட்ட சமூக அவலங்களுக்குக் காரணம் யார்..... நிச்சயமாக மேலே சொல்லப்பட்டவர்களல்ல.....

பின் வேறு யார்..... நாம் தான் ஆம் நம் சமுதாயந்தான்..... அரசியல்வாதிகள், அரசு ஊழியர்கள்,காவல்துறை அதிகாரிகள்


நீதித்துறையைச் சார்ந்தவர்கள்,மருத்துவர்கள் , வழகக்றிஞர்கள், ஜாண்டேவிட்டுகள், நவீன கல்வித்தந்தையர்கள்,கல்வித்துறை அதிகாரிகள், ஆசிரியப்பெருமக்கள் அனைவரும் எங்கிருந்து வந்தவர்கள்... நாம் சார்ந்த, நம் சமூகத்திலிருந்துப் புறப்பட்டவர்கள் தான் அல்லாமல் புதிதாய் தோன்றியவர்களில்லை இவர்கள்.... இவர்களெல்லாம் திடீரென்று உருவானவர்களுமல்ல
கொஞ்சம் கொஞ்சமாய் பல்கிப் பெருகியவர்கள் இவர்கள்.....நாம் தான் இவர்களையெல்லாம் நம் தேசத்தில் செல்வாக்கோடு சொல்வாக்கோடு சமூதாய அங்கீகாரத்தோடு வளையவிட்டோம் அதன் பலன் இவர்ளைப்போன்று பலரும் பல்கிப்பெருகினார்கள்..
ஆகவே இந்த சமூதாயத்தில் இப்படிப்பட்டவர்கள் மீண்டும் நம்மில் உருவாகமல் இருக்க முதலில் நாம் அவர்களுக்கு சமூக அங்கீகாரம் அளிக்கக்கூடாது நாம் அவர்களுக்குக் கொடுக்கின்ற அங்கீகாரம் நமக்குப்பிறகு வரும் சந்ததியினருக்கு ஒருத் தவறான முன்னுதாரணம் ஆகிவிடும். நாம் நம் பிள்ளைகளை மருத்துவர்களாக, பொறியியல் வல்லுநர்களாக
அதுவும் மென்பொருள் பொறியாளர்களாக உருவாக்க அதிக ஆர்வம் காட்டுகிறோம் வழக்கறிஞர்களாக என பலவாறு உருவாக்க முயற்சிக்கிறோம் ஆனால் நாம் யாருமே அவர்களை நல்ல மனசாட்சியுள்ள குண நலன்கள் உள்ள நல்ல மனிதர்களாக உருவாக்க
முனையவில்லை நிச்சய மாக அனைவருக்கும் நம் பிள்ளைகள் நல்ல மனிதனாக இந்த சமுதாயத்தில் வாழ வேண்டும் என்ற எண்ணம் இருக்கும் கனவு இருக்கும். ஆனால், எண்ணம் வேறு அதற்கு வேண்டிய செயல் பாடு வேறு கனவு வேறு அதை நனவாக்கும் குறிக்கோள் வேறு வேறு. எண்ணதையும் கனவினையையும் அடையும் வழி என்ன?

ஏட்டுக்கல்வியை மட்டுமே புகுத்தாமல் பண்பு பயிற்சியினை வருங்கால சந்ததியினருக்கு புகட்ட வேண்டும்......

புனித நூல்கள் புனிதர்களின் வாழ்க்கை வரலாறுகளை புகட்ட வேண்டும், கீதையின் பாதயை, இதிகாசங்களை, நான்கு வேதங்களை நாலாயிர திவ்யப்பிரபந்தங்களை திருக்குறளை,தேவரத்தை திருவாசகத்தை கற்றுக் கொடுக்கப்பட வேண்டும் நம் நாட்டின் பெருமைகளை அவதாரப்புருஷர்களை விஞ்ஞான மேதைகளை வீரசிவாஜியின் வீரத்தை விவேகானந்தரின் குருபக்தியை நேதாஜியின் தேசபக்தியை அவரின் சிந்தனைத்துளிகளை காந்தியின் வாழ்க்கை முறையை கற்றுக்கொடுக்கவேண்டும். மேல சொன்னவை எல்லாம் நம் பள்ளிக்கூடங்களில் பாடங்களாக இருக்கத்தான் செய்கிறது பின் ஏன் மறுபடியும் கற்றுக்கொடுக்கவேண்டும் என் எண்ணுகிறோமா அப்படியென்றால் நம் எண்ணம் தவறு ஏனேனில் அவையெல்லாம் மதிப்பெண் எடுப்பதற்காக வாழையடி வாழையாக உரு போட்டு மாணவர்களால் மனப்பாடம் செய்யப்பட்டு தேர்வுக் காலங்களில் ஒப்புக்காய் ஒப்புவிக்கப்படுகிறது. இவற்றையெல்லாம் வாழ்க்கையில்
கடைப்பிடிக்க வேண்டும் என்று நம் மாணவ மணிகளுக்கும் வருங்கால் சசந்ததியினருக்கும் உணர்த்தவில்லை ஒரு போதும் மாறக அவர்களை மதிப்பெண் எடுக்க வைக்க மட்டுமே தூண்டினோம் மதிப்பெண்ணும் வேண்டும் நாலு பேர் மதிக்கும் படியும் வாழ வேண்டும் என்பதையும் அறிவுறுத்துவோம். நம்முடைய பாடத்திட்டமானது ஆங்கிலேயன் மேக்காலேவால் ஒருவாக்கப்பட்டது....

மேகலே நம்முடைய கல்வித்திட்டத்தை உருவாக்கிவிட்டு தன் ஆங்கிலேய தலைமைக்கு இவ்வாறாக எழுதியிருக்கிறான் நான் பாரத்தின் அனைத்துபகுதிகளுக்கும் குறுக்கும் நெடுக்குமாக மேலும் கீழுமாக சுற்றி வந்திருக்கிறேன் இங்கெல்லாம் என்னால் ஒரு பிச்சைக்காரனையோ ஒரு திருடனையோ பார்க்கமுடியவில்லை இந்த நாடு பெரும் செல்வ செழிப்புள்ள நாடாக விளங்குகிறது
மிகச்சிறந்த குண நலன்களை கொண்டவர்களாக இருக்கிறார்கள் எனவே நம்மால் இவர்களை வெல்வது மிகவும் கடினம் ஆனால் இந்த நாட்டின் முதுகெலும்பாக இருக்கும் ஆன்மீகம், மிகவும் பழமை வாய்ந்த கலாச்சாரம் அடையாளங்களை உடைத்தெறிய வேண்டும் அதற்கு அவர்களின் புரதானமான கல்வி முறையை மாற்றி அமைக்க வேண்டும் அவர்களின் கலாச்சாரத்தை சீர்குலைக்க வேண்டும். அவர்கள் மனதில் மேற்கத்திய கலாச்சாரவும் மொழியும் தான் உலகில் தலை சிறந்தது என அவர்கள் மனதில் தோன்றச்செய்தால் அவர்களுடைய சுய அடையாளத்தையும் கவுரவதையும் நாட்டுப்பற்றயும் கலாசாரத்தையும் இழப்பார்கள் அதன்
பின் அவர்களையும் பாரதத்தையும் நம் ஆளுமைக்கு எளிதில் கொண்டு வரலாம் . அதோடு மட்டுமல்ல ஒருவேளை வரும் காலங்களில் நாம் இந்த நாட்டை விட்டு வெளியேறினாலும் அவர்கள் உடலளவில் இந்தியர்களாக இருப்பார்கள் ஆனால் மனதளவில் மேற்கத்திய சிந்தனைகள் மேலோங்கியிருக்கும் என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளான் (1835/பிப்-2) நண்பர்களே இப்படி பட்ட ஒரு ஆசாமியின் எண்ணத்தில் உருவான கல்வி முறை எப்படி இருக்கும். இதன் விளைவாகத்தான் ஷெல்லியையும் ஷேக்ஷ்பியரையும் பற்றி படித்த அளவுக்கு பாரதியையும் தாகூரையும் பற்றி நாம் அதிக அளவில் படிக்க வில்லை. நெப்போலியனின்
வீரத்தைப் பற்றி படித்த அளவுக்கு வீர சிவாஜிய பற்றி கற்றுத் தரவில்லை கிரேக்கதை சொன்னவர்கள் லேமூரியக்கண்டத்தை பற்றி வாயேத்திறக்கவில்லை. ஆக்ஸ்போர்ட் பல்கலை கழகத்தைப் பற்றி பீற்றிக்கொள்பவர்கள் மேற்கத்தியர்கள் நாகரிகம் அடைவத்ற்கு முன்பாக இங்கெ இருந்த நாலந்தா பல்கலை கழகத்தைப் பற்றி மூச்சே விடவில்லை. நாலந்தாவைப் பற்றி நல்லா நாலு வரி சொன்னாங்க ஆனா விரிவா எதையும் இன்னும் சொல்லிக்கொடுத்தப்பாடில்லை.ஆனாலும் உலகில் தோன்றிய கலாச்சாரங்கள்
அனைத்தும் அழிந்த பின்னும் நம் கலாச்சாரம் இன்னும் கொஞ்சமாய் வாழ்கிறது ஏனெனில் இந்நாட்டி கலச்சாரம் மறக்காத மக்கள் கொஞ்சம் இன்றும் வாழ்ந்து கொண்டிருப்பதால்......... ஆகவே நாம் சிந்திப்போம் செயல் படுவோம்



- எண்ணகிறுக்கல்கள்

மா.பொ....

குமுறலுடன்

வாழ்க ஜனநாயகம்..... வாழ்க தமிழ்! வாழ்க தமிழன்!!....


பக்கத்துத்தீவிலே பசியால் பட்டினியால் - இங்கோ

தமிழ் தமிழன் என ஒப்பாரி வைத்து விட்டு....

பதவிக்காய் பரிதவிப்போடு பறக்கிறது

தள்ளாத வயதிலும்....

மகனுக்கும் பேரனுக்குமாய் பதவி பேரங்கள் நடத்தியும்

பணியாத காரணத்தால் மிரட்டிக் காரியம் சாதித்தார் எங்கள்

சமூகப் போராளி ..... சமூகநீதிப்போராளி

வெளியிலிருந்து ஆதரவு எதற்காக....

காவிரி நீருக்கு வேண்டியா இல்லை

ஹொக்கெனக்கல் திட்டத்திற்காவா இல்லை

பெரியார் அணைப்பிரச்சினைக்காவா இல்லை

எம்தொப்பிள்கொடி உறவு அங்கே

சிங்கள கொடிந்தேசத்தில்

புனர் வாழ்வு முகாம் என்ற பெயரில்

கொட்டடிச் சிறையில் மரணத்தின் வாசலை

சத்தமில்லாமல் முத்தமிட்டுக்கொண்டு......

உண்ண உணவும் உடுக்க உடையும் இல்லாமல்...

கஞ்சிகுடிப்பதும் அங்கே தான் கழிவறைகளும் அங்கேதான்

எனக்காலனின் வருகைக்காய் காத்திருக்கும்

எம் கண்மணிகளுக்காக வேண்டியா இல்லை இல்லை ஒரு போதும் இல்லை

மகனுக்கு மகுடம் சூட்டவும் பேரனுக்கு பெரும்பதவி வேண்டியும் முடிந்தால்

மகளுக்கு மணி மகுடம் சூட்டவும் வேண்டித்தான் இந்த பதவிப்பேரங்கள்...

காவிரியில் தண்ணீர் வந்தால் என்ன வராட்டி என்ன

ஹொக்கெனக்கல் திட்டம் நடந்தால் என்ன நடக்காட்டி என்ன

பெரியார் அணைப்பிரச்சினை தீர்ந்தால் என்ன தீராட்டியென்ன...

தமிழன் செத்தால் என்ன இருந்தால் என்ன

எனக்கும் என் குடும்பத்திற்கும் பதவியிருந்தால் போதும்...

என் குடும்ப கருவூலங்கள் நிரம்பி வழிந்தால் போதும்..

மன்னராட்சி முடிந்து மக்களாட்சியாம்...

சிரிப்புதான் வருகிறது....

தம் மக்களுக்கு முடிசூட்டுவதுதான்

(தம்) மக்கள் ஆட்சியோ யார் கண்டது ...

விளக்கவுரை வந்தாலும் வரும் முரசொலியில் - அன்று

தன் ஊழலை மறைப்பதற்காக காவிரி நீரை

அடகு வைத்தார் அன்னை இந்திராவிடம்... பின்

கச்சத்தீவையும் பணையம் வைத்தப்போது

பேசமடைந்தையாய் ஆமாம் சாமியானார் நம் பேச்சாளர்

ஹொக்கெனக்கலைக் கூட்டணிக்காய் காவுகொடுத்தார்...

பெரியார் அணை விவகாரம் அறிக்கைக்களோடு அடங்கிப்போனது...

அவற்றிற்கேல்லாம் மேலாக....

உயிர்பிச்சைக் கேட்கும் தமிழனை புறந்தள்ளி விட்டு

தன் ஒரு தாலிக்காய்.....

பல இலட்ச தமிழ்ப் பெண்களின் தாலியறுப்புக்கு

தலையசத்த அன்னிய மண் அன்னையிடம்(?)

பதவிப் பிச்சைக்கேட்கிறார்...

அன்னிய சோனியாவை அன்னை சோனியா என்கிறார்

இவர் அகராதியில் தமிழன் இரத்தத்தை குடிப்பவர்களெல்லாம்

அன்பே வடிவானவர்களா.....கடைசியாய் கடவுளிடம் கேட்கிறேன்

அரக்கன் ராஜபக்ஷேயை இவர்கள்

அருட்த்தந்தையென அழையாமலிருக்க

அருள் புரியட்டும்.....





குமுறலுடன்



மா.பொ

தீபாவளி வாழ்த்துக்கள்...

மனமின்னும் லயிக்கவில்லை

தீபாவளித் திருநாள்.....

தர்மம் காக்க அசுரனையன்று

அந்த அச்சுதன் அழித்த நாள்........

தீபாவளித் திருநாள்...........இந்நாளை

ஆண்டாண்டு காலமாய் ஆனந்தமாய்

நாம் கொண்டாடுகிறோம்....

சிறார்களாய் சிட்டு குருவிகளாய்....

வலம் வந்த நம் வசந்த காலங்களில் நாம்

பண்டிகையின் வருகைக்காய் காத்திருந்த நாட்களுண்டு...

பெற்றோர்க்கும் பண்டிகையென்றாலே பதட்டம் தான்....

பிள்ளைகள் மனம் கோணாமல்....

கொண்டாடவேண்டுமென்ற பதட்டம்.... நமக்கோ...

விதவிதமான பலகாரங்களிலும்..... பட்டாசுகளிலும்

வண்ணமயமான புத்தாடைகளிலும் மனம் லயிக்கும்

பங்காளிகளோடும் பக்கத்து வீட்டாரோடும் நாம்

கொண்டாடிய தீபாவளி இன்னும் பசுமையாய்

இதயத்தின் ஓரத்தில் இருக்கத்தான் செய்கிறது....

காலங்களும் மாறின காட்சிகளும் மாறின

கலைந்து போன கனவுகளோடு கைக்குலுக்க வேண்டி

கிராமம் விட்டூ நகரம்,நகரம் விட்டு பல நாடுகளென

கலைந்து போனோம் பலதிசைகளில்..... இன்று

வசதிகள் வந்தாச்சு வாய்ப்புகள் வந்தாச்சு...

விதவிதமான பலகாரங்கள் பலவிதமான பட்டாசுகள்

விலையுர்ந்த புத்தாடைகளெல்லாம் வீட்டிற்கு வந்தாச்சு

வீதியெங்கும் கூட கொண்ட்டாட்டம் தான் - ஆனால்

மனம் தான் அன்று போல் இன்னும் லயிக்கவில்லை


மா.பொ

ஆங்கில புத்தாண்டு....

ஆங்கிலப்புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

புத்தாண்டன்று.....(தமிழ்)

புத்தாடையுடுத்தி புன்சிரிப்புடன்

ஒருவருக்கொருவர் வாழ்த்துக்கள் சொல்லி

படையல் போட்டு...

சாமியிடம் மனமுருகி வேண்டி

மகிழ்ந்திருந்த காலம் போய்

ஆங்கில புத்தாண்டன்று....

அன்னிய அநாகரிக கலாச்சாரத்திற்கு

நாம் அடிமையானதால்....

பேய் கூச்சலும் அநாகரிக ஆட்டம் பாட்டங்களும்

தமிழனை தழுவி காலம் பல கடந்தாகிவிட்டது....

உயர்தொழில் நுட்பங்களனைத்தையும்

உலகோரிடமிருந்து உள் வாங்கிய நாம்

சமூகத்தில் ஊனமான அவர்களின்

கலாசாரத்தை ஏன் நாம் உள் வாங்கவேண்டும்

இன்று.....

புத்தாண்டை வரவேற்கிறோம் என்ற போர்வையில்

கேளி(லி)க்கை விடுதிகள் பல

கரிசனமாய் கடைவிரிக்கின்றன நம்

கலாசாரத்தை களங்கப்படுத்த

தனியாக வருவோருக்குத் தனிக்கட்டணமாம்

துணையோடு வருவோருக்கு....

துச்சமானக் கட்டணமாம்.... என

மின்னஞ்சல், பிரசுரங்கள் மூலமாக.

புத்தாண்டு களியாட்டங்களில்

களம் புகாதவர்களை பிற்போக்குவாதிகளென

முத்திரைக்குத்தும் விதமாய்....

மூளைச்சலவை செய்தன.....

சின்னத்திரை உலகமோ......

பெயருக்கு ஒரு ஆசியுரை பின்

சாத்திரத்திற்கு ஒரு பட்டிமன்றம்

அதன் பின்.....

பெரியத்திரை குத்தாட்ட குஜிலிகளின்

மனம் கூசும் குத்தாட்ட அலப்பறைகளை

குடும்பத்துடன் பாருங்கள் என

கூக்குரல் இடுகின்றன...

பலக்கலாச்சார காவலர்களின்

தொ(ல்)லைக் காட்சி நிறுவனங்கள்

முத்தாய்பாய்....

'ஆ' என்றால் ஆகம விதியென அலறும்

ஆலய அர்ச்சகர்களும் அறங்காவலர்களும்

ஆகமவிதிகளுக்கு எதிராக

ஏகதேசியையும் சிவராத்திரியையும் போல்

ஆலயங்களை அர்த்த சாமம் கடந்தும்

திறந்து வைத்து.......

காசுப்பார்க்க கடைவிரிக்கிறார்கள்

நாமும் கால்கடுக்க காத்திருந்து

கடவுளைத் தரிசிக்கிறோம்.....

கடைசியாய்.....

கடந்த வருடம் சொன்னது போல்

இவ்வருடமும் சொல்கிறேன்...

என்னடா இவன் சொல்கிறான் ஆங்கிலப் புத்தாண்டு அதுவுமாய்

கோவிலுக்கு போகாதீங்க கொண்டாடாதீங்க...ண்ணு... நாம

கோவிலுக்கு போகாணும் கொண்டாடவும் வேணும்(அவரவர் விருப்பத்தை பொறுத்து)

ஆனால் நம் பழக்க வழக்கங்களையும்

மரபுகளையும் மீறாமல்..........

நாமே நம் மரபுகளை கடைப்பிடிக்காவிட்டால்

வேறு யார் கடைப் பிடிப்பது....?
மா.பொ

வலியை மறந்து....

வலியை மறைத்து...

குடியரசு தினம்....

மன்னராட்சி முடிந்து

மக்களாட்சியின் தொடக்கம்

நாமெல்லாம் இந்நாட்டு மன்னர்கள்

என அறிவித்த தினம்....

முடியாட்சிகள் மறைந்து

குடிமக்களின் ஆட்சி மலர்ந்த தினம்

ஆனால் இன்று....

மக்களுக்கான மக்கள் ஆட்சிகளெல்லாம்

தன் மக்களுக்கு மட்டுமான ஆட்சிகளாகவும்

வாரிசுகள் இளவரசர்களாகவும்

குறுநில மன்னர்களாகவும்....

என மாறியது.....

காலத்தின் கோலம்.....ம்ம்ம்ம் என் செய்ய

வலியை மறந்தும் மறைத்தும் நாம் கொண்டாட வெண்டியது தான்


மா.பொ

விடைபெறுகிறேன்....

\


வாழ்க்கைச் சக்கரத்தின்..... வேலை எனும் அச்சு...


கல்வி எனும் கங்கை நீராடிவிட்டு

வேலை வேண்டி பயணம் தொடர்ந்தேன்

காலம் எனை சென்னைக்கு வரவைத்தது

சென்னை எனை அன்போடு அரைவணைத்து

என் தகுதிக்கு வேலை வழங்கியது

எங்கல்லாமோ சுற்றித்திரிந்து கடைசியாய்

காலம் எனை ZAMIL STEEL - னுள் கடந்து வரச்செய்தது

இரண்டாயிரத்தின் தொடக்கத்தில், அன்றிலிருந்து

இன்றுவரை.......(இடையிலே மூன்றாண்டுகள் தவிர)

ZAMIL STEEL அங்காமாயிருந்தது ஆனந்தம் தான்

ZAMIL - லில்.........

நானாக வந்திங்கு நாமாக ஆனோம்

ZAMIL கடல் தன்னில் துளியாக ஆனோம்

ஊரேக மனமில்லை உறவுகளை பிரிந்து

பல கற்றும் பல கேட்டும் அன்பில் திளைத்தேன்

நண்பர்கள் ஆசான்கள் நல்லாசி வேண்டும்..... வேறு

வேலை அழைக்கின்றது போகத்தான் வேண்டும்......

எனக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்த மேலாளர்கள்

குறிப்பாய்....

எனக்கு மீண்டும் வாய்ப்பளித்த பொது மேலாளர்,

MP2 மேலாளர் அவர்களுக்கும் மற்றும்

அன்பு நண்பர்கள் சக ஊழியர்கள் அனைவருக்கும்

எனது உளமார்ந்த நன்றியினை தெரிவித்து

வாழ்க்கைச் சக்கரத்தின் எதாவது ஒரு கோணில்

மீண்டும் நாம் சந்திப்போம் என்ற நம்பிக்கையில்

தற்காலிகமாய் விடை பெறுகிறேன்.............

நண்பர்களுக்கு.......

என் உழைப்பிலே உடனிருந்து உயர்விலே ஊக்கமளித்து

அயர்விலே ஆதரவளித்து அன்பிலே அரவணைத்த

ஆருயிர் தோழர்களே..! நம் நீங்கா நல் நினைவுகளுடன்.....

நீங்குகிறேன் ZAMIL - ஐ விட்டு..............

தொடர்புக்கொள்ள விருப்பமெனில் அணுகவும் தயக்கமின்றி

வேண்டியது உடன் செய்வேன்,அணுஅளவும் தயக்கமின்றி




மா.பொ......


யோக ஷேமோ ந: கல்பதாம் - யஜூர் வேதம் 22:22

இறைவன் அருளால் நாம் எல்லா நாட்களும் பெறுவோமாக

ஆ நோ பத்ரா: க்ரதவோ யந்து விஷ்வதா - ரிக் வேதம் 1:89:1

எல்லா திசைகளிலிருந்தும் நல்லுணர்வுகள் நற்செயல்கள் நம்மை வந்தடையட்டும்

தலைப்பிரசவம்....

தலைப்பிரசவம்..............

தாய்மை யடைந்தவளுக்கு

முதல் குழந்தை....

கவிஞனுக்கு முதல் கவிதை

பாடகனுக்கு முதல் பாடல்

அரசியல் வாதிக்கு முதல் பதவி

விஞ்ஞானிக்கு முதல் கண்டுபிடிப்பு

மாணவனுக்கு......

உயர்நிலைத் தேர்வு முடிவு...

இளைஞனுக்கு முதல் முயற்சி

கணினி பொறியாளனுக்கு....

முதல் மென்பொருளாக்கம்....

மருத்துவருக்கு.....

முதல் அறுவைச் சிகிச்சை

வழக்குரைஞனுக்கு முதல் வழக்கு-ஆனால்

விவாசாயிக்கும் ஏழைப் பாழைகளுக்கும்

என்றுமே........

தலைப்பிரசவம் தான்......

-மா.பொ

சுவாமி விவேகானந்தர்..

உன்னைப்போல் ஒருவர் இன்னும் கிடைத்தப்பாடில்லை...

அன்று நீ.........

பாரதத்தின் ஆன்மீகத்தை

அகிலம் அறிய வைத்தாய்

காவியுடையில் காவியம் படைத்தாய்....

கர்மயோகத்தை கருத்தாய் காத்தாய்

மேலை நாட்டினருக்கு.....

கீழை நாட்டின்.......

கீதையின் பாதையை

கீர்த்தியாய் சொன்னாய்....

அறுசுவை உணவுகொடு பின்

அறிவு புகட்டு என்றாய்........

சக நாட்டுச் சகோதரர்கள்

சகதியில் கிடந்ததால்....

பட்டாடையையும் பஞ்சு மெத்தையையும்

பரங்கியர் படுக்கத் தந்தபோது......

பாங்காய் பரிவுடன் தவிர்த்தாய்

உலக சமய மாநாட்டில்.......

சீமான்களே சீமாட்டிகளே என

மேலைநாட்டினர் அரங்கினரை அழைக்க

நீயோ..... சகோதர சகோதரிகளேயென

சாந்தாமாய் அழைத்தாய்

அமர பாரதத்தின் ஆன்மீக கலாசாரத்தை

அழகாய் சொன்னாய்....

நாமெலாம் சோதர சோதரிகளென...

உலகோருக்கு உரக்கச் சொன்னாய்

உலகில் பாரதத்தை உயர்த்திப்பிடித்தாய்....

ஒரு நூறு இளைஞனைத் தாருங்கள்

அவர்கள் மூலம்

நான் பாரதத்தை உலகின் குருவாய்

மாற்றி காட்டுகிறேன் என்றாய்..... இன்று

ஒரு நூறு என்ன பலநூறு இளைஞர்கள்

உன் பாதை தொடர்ந்திடத் தயார் தான் - ஆனால்

எங்களுக்கு அண்ணலே உன்னைப்போல்

ஒருவர் இன்னும்......................

எங்களுக்கு கிடைத்தப்பாடில்லை

-மா.பொ

பொங்கலோ பொங்கல்

பழமை மறவாமல்..............

மாடுகட்டிப் போரடித்தால்
மாழாது செந்நெல் எனவே
யானைக்கட்டி போரடித்த நாட்டில்
வயல் வெளிகளெல்லாம்......
வாழ்விடங்களாயாச்சு.....
வானை முட்டும் வணிக
வளாகங்களுமாயாச்சு

காடு கழனியெல்லாம் கான்கிரீட் வீடுகளாச்சு....
காய்கறித் தோட்டங்களின் நடுவில்
கல்லும் மணலும் குவிச்சாச்சு...
கறவை மாடுகளும் காளை மாடுகளும்
கசாப்புக் கடைக்கு அனுப்பியாச்சு
ஏரும் கலப்பையும் எங்கேயோ போயாச்சு....
விளைநிலங்கள் வீட்டுமனைகளாய்....
கூறுபோட்டு கூவிகூவி வித்தாச்சு....
விவாசாயியை வீதியில் நிற்க வெச்சாசு

நீர் நிலைகளில் நச்சு கலந்து
நாசம் செய்து மாசு படுத்தியாச்சு...
ஆடம்பரமா வாழ பழகியதால்
பகலவனின் கதிர்களைக்கூட பாழ்படுத்தியாச்சு
கண்டபடி வாழ்வதனால் கண்டதையெல்லாம்
வீதியெலே வீசியெறிஞ்சாச்சு..
சுற்றுப்புறச் சுத்ததை சுத்தமா மறந்தனனால்
சுற்றுப்புற சூழலும் சூனியமாச்சு...........ஆனாலும்
விவசாய விழாவான பொங்கலை
விமர்சாயாய் தான் வீ (தி) டு தோறும் கொண்டாடுகிறோம்.......

விளைப்பொருகளெல்லாம் வீட்டுமுற்றமதில்
பகலவன் கதிரொளி பட படையலிட்டு
பொங்கலோ ஓ பொங்கல் என
கூக்கிரலிட்டு......
மும்மாரிபொழிந்து முப்போகம் தந்த
மூலவனையும் மும்மூர்த்திகளையும்
கதிர் கொண்டு கதிர் வணங்கியகாலம்
பழங்கதையானது....

இயற்கையோடு நாம் இசைந்து வாழாமல்
செய்ற்கையாய் வாழப்பழகியாதால்
இயற்கையும் பொய்த்தது நம்
விவசாயமும் பொய்த்தது ..அதனால்
நகரங்களில் நாம் தஞ்சமடைய...
அடுக்கங்களும் வரிசைவீடுகளும்
நம் வசிப்பிடங்களாயின....

எங்கும்....
முற்றங்ளில்லா முறைவாசல்கள் அதனால்
சமையல் வாயுவின் தயவால்
வீட்டுக்குள்ளே பொங்கல் வைத்து
சாளரங்கள் வழியே வரும் ஒளியில்
பொங்கலோ ஒ பொங்க்ல் என
நாமும் கொண்டாடுகிறோம்....பொங்கலை
பழமை மறவாமல் இருக்க........
- மா.பொ

About Me

My photo
Chennai, Tamil Nadu, India
முக்கடலின் திருவேணி சங்கமும் அன்னை குமரிஅம்மனும் வீரத்துறவி விவேகானந்தரின் நினைவுமண்டபமும் பாரததாயின் பாதமுமான கன்னியாகுமரிமாவட்டத்தில் 12 சிவாலய ஆலயங்களில் 11 வது ஆலயமான திருப்பன்றிகோடு ஸ்ரீமாஹாதேவர் குடிகொண்ட மற்றும் பள்ளியாடி பழய பள்ளியப்பன் பள்ளிக்கொண்டுள்ள பள்ளியாடி எனும் ஊரில் மாதவன், கோமதி என்போருக்கு நான்காவது மகனாக பிறந்தவன். வயிற்றுப்பிழைப்புக்காய் வாழ்க்கையின் வசந்தங்களோடு கைகுலக்க வேண்டி சென்னை மாநகருக்கு புலம் பெயர்ந்தவன். வந்த இடத்தில் வாழ்க்கைத்தரம் வளர சென்னைமாநகரம் வாய்ப்பளித்தது.தனிமரமாக வாழ்ந்த நான் கடந்த 2007 மே மாதம் 27ம் தேதி என்னோடு துஷாரா எனும் பெயருடைய இன்னொரு இணை மரத்தையும் என் வாழ்க்கையில் இணைத்துக்கொண்டேன் எங்களின் இனிய இல்லறத்தால் தயனியா என்ற விழுதினை 2009 மார்ச் 14 ம் தேதி ஈன்றெடுத்தோம்.தற்போது சென்னையில் சூளைமேடு எனும் பகுதியில் சந்தோஷமாய் வாழ்ந்து வருகிறேன்....

Search This Blog

Followers