Monday, July 11, 2011

தீபாவளி....

பகவனே நீ தசாவாதாரமாய்...........

தரணியில் மீண்டுமென்றுவதரிப்பாய்

அன்று நீ..................

தர்மம் காக்க அதர்மம் அகற்ற

அகிலத்தில் அவதரித்தாய்

அதர்மசக்தியாம் அசுரனையுமழித்தாய்

தீயவனை நீயழித்த நாள் முதலாய் நாங்களும்

வண்ணவிளக்குகளை வீதியெங்குமேற்றி

வாணவேடிக்கைகளும் புத்தாடைகளும்

விதவிதமான பலகாரங்களுமாய்- இன்றும்

தரணியெங்கும் நாங்கள் பல்லாண்டுகாலமாய்

கொண்டாடுகின்றோம்.......சந்தோஷம் தான் - ஆனால்

நீ வாழும் உறைவிடமும் உனக்காய் எம்முன்னோர்கள்

வாரி வழங்கிய செல்வங்களனைத்தும் அரசாங்காங்களின்

அசுரப்பிடியில் ஆட்பட்டிருக்கிறது......

மதசார்பற்ற அரசென சொல்பவர்ள்

ஆலயங்ளின் சொத்துகளிலும் வருமானங்களிலும்

ஆலாய் பறக்கிறார்கள் இன்றும் புரியவில்லை

நாங்கள் வேண்டுதலாய் மொட்டைப்போடுகிறோம்

ஆட்சியாளர்களோ உன்னையே மொட்டை அடிக்கிறார்கள்

உன்னைத் தரிசிக்கப்பணம் வசூலிப்பவர்கள்

உன் உண்டியலிலும் கைவைக்கிறார்கள்.....

ஆட்சியில் மட்டுமா கொள்ளை அடிக்கிறார்கள் - உன்

ஆலயத்திலும் அல்லவா கொள்ளையடிக்கின்றார்கள்

கொள்(ளை)கை மறவர்கள்........

தட்டில் பணம் போட்டால் தான்

தடங்கலில்லா உன்னை தரிசிக்க முடியும்

அகிலத்தை காலால் அளந்த உனக்கு

ஆறுகால பூஜைகளெல்லாம் ரேஷன் முறையில்

நடத்துகின்றனர் நல்லாட்சி(?)யாளார்கள்

உன் வருமானத்தை வாரிவிழுங்கும்

உன்னைத் தரிசிக்க வரும் அடியார்களுக்கு

அடிப்படை வசதிக்கூட செய்ய முயலவில்லை

உன் கருவூலத்தில் கைவைப்பவர்கள்

பெருமைகளையும் மகிமைகளையும்

எடுத்துரைக்க என்ன வழிசெய்கிறார்கள்.

உன் திருநாமத்தையாவது சொல்லிக்கொடுக்க முயலவில்லை

மக்களெல்லாம் நின் பெருமை யறியாது

அறியாமையினால் அணி மாறுகிறார்கள் ஆங்காங்கே

அடியார்கள் அணிமாறாமல் இருந்தால்தான்

உண்டியல் நிறையும் இல்லையேல்

அரசு கருவூலங்களில் காற்றுத்தான் இருக்கும்

சாமியில்லையென்பார்களாம் ஆனால்

சாமியின் காசில் வயறு வளர்ப்பார்களாம்

பங்கு வைப்பதுதான் பகுத்தறிவோ என்னவோ...

பகவானே.....

தர்மம் காக்க அதர்மம் அகற்ற

அகிலத்தில் மீண்டும் என்று நீ அவதரிப்பாய்

ஆலயங்களைவிட்டு அரசினை என்று

அடித்து விரட்டுவாய்........

No comments:

Post a Comment

About Me

My photo
Chennai, Tamil Nadu, India
முக்கடலின் திருவேணி சங்கமும் அன்னை குமரிஅம்மனும் வீரத்துறவி விவேகானந்தரின் நினைவுமண்டபமும் பாரததாயின் பாதமுமான கன்னியாகுமரிமாவட்டத்தில் 12 சிவாலய ஆலயங்களில் 11 வது ஆலயமான திருப்பன்றிகோடு ஸ்ரீமாஹாதேவர் குடிகொண்ட மற்றும் பள்ளியாடி பழய பள்ளியப்பன் பள்ளிக்கொண்டுள்ள பள்ளியாடி எனும் ஊரில் மாதவன், கோமதி என்போருக்கு நான்காவது மகனாக பிறந்தவன். வயிற்றுப்பிழைப்புக்காய் வாழ்க்கையின் வசந்தங்களோடு கைகுலக்க வேண்டி சென்னை மாநகருக்கு புலம் பெயர்ந்தவன். வந்த இடத்தில் வாழ்க்கைத்தரம் வளர சென்னைமாநகரம் வாய்ப்பளித்தது.தனிமரமாக வாழ்ந்த நான் கடந்த 2007 மே மாதம் 27ம் தேதி என்னோடு துஷாரா எனும் பெயருடைய இன்னொரு இணை மரத்தையும் என் வாழ்க்கையில் இணைத்துக்கொண்டேன் எங்களின் இனிய இல்லறத்தால் தயனியா என்ற விழுதினை 2009 மார்ச் 14 ம் தேதி ஈன்றெடுத்தோம்.தற்போது சென்னையில் சூளைமேடு எனும் பகுதியில் சந்தோஷமாய் வாழ்ந்து வருகிறேன்....

Search This Blog

Followers