Monday, July 11, 2011

என் பார்வையில் செய்தி....(நித்யானந்தர் ..)

சன் செய்தி தொலைக்காட்சியில் கடந்த இரு நாட்களாக செய்தி வெளியிடுகிறேன் பேர்வழி எனும் பெயரில் சுவாமியார் ஒருவரின் படுக்கை அறைக்காட்சிகளை அப்பட்டமாக ஒளி பரப்பி வருகிறது.... ஒருவரின் தவறை சுட்டிக்காட்ட வேண்டும் தவறில்லைத்தான் ஆனால் அதனை சுட்டிகாட்டும் முறை சரியாக இருக்க வேண்டும்.. செய்திகளுக்கிடையே நாள் முழுவதும் இந்த மாதிரி வக்கிர காட்சிகளை ஒளிபரப்புவதால் தமிழக்த்திலுள்ள எல்லா குடும்பங்களும் ஒன்றாய் அமர்ந்து கொண்டு பார்க்க வேண்டிய இக்கட்டான நிலைமைக்கு சன் நிறுவனம் மக்களை தள்ளியிருக்கிறது. ஒரு தவறை சமுதாயத்தில் சுட்டி காட்டுவத்ற்காக சன் நிறுவன் இன்னொரு

மாபெரும் தவறை செய்திருக்கிறது. நீலப்படத்தரத்துக் இணையான வக்கிரக்காட்சிகளை நாட்டு மக்களின் வீடுகளுக்குள் திணித்திருக்கிறது
வீட்டிலுள்ள சின்னம் சிறார்கள் கூடப்பார்த்துகொண்டுவிட்டு பெற்றோர்களிடம் கேள்விகளால் துளைத்து எடுக்கிறது. அதற்கு ஒரு உதாரணம் நான் இன்று ஆட்டோவில் பயணம் செய்தபோது அந்த ஆட்டோ ஓட்டுநர் கூறிய நிகழ்ச்சி எனக்கு தூக்கி வாரிப்போட்டது
நேற்று இரவு அவ்ரும் அவர் குடும்பத்தினரும் அந்த வக்கிரக் காட்சியைப்பார்க்க நேரிட்டது நிலைகுலைந்து போனார் இந்தக்காட்சியைப்பார்த்து விட்டு சேனலை மாற்றலாம் என்றால் ரிமோட் கைக்கு எட்டியத்தூரத்தில் இல்லை வேறு வழியில்லாமல்
ஓடிபோய் தொலைக்காட்சியினையே நிறுத்திவிட்டாரம் அதற்குள் 10 வயது நிரம்பிய அவர் மகனும் 15 வயது நிரம்பிய அவர் மகளும்

பார்த்து விட்டனர். ஒரு நிமிடம் தடுமாறி விட்டாரம் பிள்ளைகளும் தாயும் கொஞ்சம் நேரம் ஹால் பக்கமே வரவில்லை 10 வயது நிரம்பிய அவர் மகன் இவரைப்பார்த்துக்கேட்டனாம் அப்பா அந்த பெண்மணியை அந்த நபர் என்ன செய்தார் இவர் பதில் சொல்ல முடியாமல் விக்கித்து நின்று விட்டார் என என்னிடம் பயண நடுவிலே வேதனையுடன் கூறிவிட்டு நான் இதற்கு என்ன பதில் என் மகனிடம் சொல்ல முடியும்.... என என்னைக்கேட்டார் என்னாலே அவருக்குப் பதில் சொல்ல முடியாமல் வாய் மூடி இருந்தேன் .. இந்த மாதிரியான அசாதரண சூழ்நிலை கடந்த இரு தினங்களாக தமிழ் நாட்டின் பெரும்பான்மை குடும்பங்களில் நடந்திருக்கும். சன் நிறுவனம் சமுதாய அக்கறை என்ற போர்வையில் அக்கிரமங்களை அம்பலப்படுத்துகிறோம் என நினைத்துக்கொண்டு வக்கிரக் காட்சிகளை வீடுகளுக்குள் திணித்திருக்கிறது. .

இந்த மாதிரியான நபர்களின் செயல்களால் இந்துமததின் மாண்புளும் பெருமைகளும் களங்க மடையாது காரணம் இவர் ஒன்றும் இந்து மதத்தின் பெரிய சாமியாரும் இல்லை ஒட்டு மொத்த இந்துக்களின் பிரதிநிதியும் இல்லை... சாதரண ஆன்மிக மக்களின் மனம் கொஞ்சம் பதறும் அவ்வுளவுதான். இதனால் இந்து மதத்திற்கு எந்த பாதிப்பு இல்லை. பத்திரிகைகளும் தொலைக்காட்சி நிறுவனங்களும் தான் தேவையில்லாம் தூக்கி வைத்து இவரைக்கொண்டாடியது அதேப் பத்திரிகை உலகமும் தொலைக்காட்சி நிறுவனங்களும் தான் இப்போது மிதிக்கிறது....என்னைப்போன்ற சாமான்ய மக்களோ ஊடகங்கள் கொடுக்கும் முக்கியத்தைப்பார்த்துவிட்டு இவரைபோன்ற நபர்கள் தான் ஆன்மிகத்தை காப்பாற்ற அவதாரம் எடுத்தவர் என நம்பி அவர் பின்னால் செல்கிறார்கள் துக்ளக் ஆசிரியர் திரு.சோ அவர்கள் சொல்வதைப்போல " எதைத் தின்றால் பித்தம் தெளியும்" என்ற மனநிலையில் சில மக்கள் இருப்பதால் இவரைப்போன்ற நபர்கள் குறுகிய காலத்தில் பிரபலம் அடைந்து விடுகிறார்கள்... ஊடகங்களும் இவரைப்போன்றவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை முறையினை பரப்பரப்பு செய்திகளை வெளியிடுகிறோம் என நினைத்துக்கொண்டு வக்கிர காட்சிகளை ஒளிபரப்புகிறது இதனால் சமூகத்தில் எதிர்விளைவுகள் உருவாகும் என்ற சமூக அக்கறை துளியும் இல்லாமல் செயல் படுகிறது. ஒரே நாள் முழுக்க ஒரு காட்சியை ஒளிப்பரனதோடு மட்டுமில்லாது அந்த காட்சியை இரண்டு மூன்று நாட்கள்
தொடர்ந்து ஒளிப்பரப்பவேண்டும் என்ற நோக்கில் செய்திகளை தயாரித்து ஒளிப்பரப்பியது..

.. நான் அந்த சாமியார் என சொல்லிக்கொள்பவருக்கு வக்காலத்து வாங்குகிறேன் என நினைக்கலாம் ஆனால் என் நோக்கம் அது வல்ல அவர் தவறு செய்தார இல்லையா என்பதல்ல என்னுடைய வாதம் அவர் தவறே செய்திருக்கலாம் தனி மனித ஒழுக்கத்தை உலகத்துக்கு சொன்னவர் தன் வாழ்வில் கடைப்பிடிக்காமல் இருக்கலாம் அதற்காக அந்த ஒரு நிகழ்வை நாட்முழுவதும் ஒளிபரப்பி அதி முக்கியத்துவம் ஏன் கொடுக்கவேண்டும் ஒரு வேளை சன் நிறுவனத்துக்கும் அந்த நபருக்கும் தனிப்பட்ட விறுப்பு வெறுப்பு இருக்குமோ என சந்தேக மாக இருக்கிறது... எனவே ஊடகங்களுக்கு என்னைப்போன்றவர்களின் வேண்டுகோள் என்னவென்றால் தயவு செய்து
பரப்பரப்பு செய்திகள் என்ற போர்வையில் இதைப்போன்ற அபத்தமான காட்சிகளை ஒளிப்பரப்பி மனிதமனங்களில் சலனத்தை ஏற்படுத்தாதீர்கள் குறிப்பாக பிஞ்சு உள்ளங்களிடம் நஞ்சைப் பரப்பாதீர்கள்.

No comments:

Post a Comment

About Me

My photo
Chennai, Tamil Nadu, India
முக்கடலின் திருவேணி சங்கமும் அன்னை குமரிஅம்மனும் வீரத்துறவி விவேகானந்தரின் நினைவுமண்டபமும் பாரததாயின் பாதமுமான கன்னியாகுமரிமாவட்டத்தில் 12 சிவாலய ஆலயங்களில் 11 வது ஆலயமான திருப்பன்றிகோடு ஸ்ரீமாஹாதேவர் குடிகொண்ட மற்றும் பள்ளியாடி பழய பள்ளியப்பன் பள்ளிக்கொண்டுள்ள பள்ளியாடி எனும் ஊரில் மாதவன், கோமதி என்போருக்கு நான்காவது மகனாக பிறந்தவன். வயிற்றுப்பிழைப்புக்காய் வாழ்க்கையின் வசந்தங்களோடு கைகுலக்க வேண்டி சென்னை மாநகருக்கு புலம் பெயர்ந்தவன். வந்த இடத்தில் வாழ்க்கைத்தரம் வளர சென்னைமாநகரம் வாய்ப்பளித்தது.தனிமரமாக வாழ்ந்த நான் கடந்த 2007 மே மாதம் 27ம் தேதி என்னோடு துஷாரா எனும் பெயருடைய இன்னொரு இணை மரத்தையும் என் வாழ்க்கையில் இணைத்துக்கொண்டேன் எங்களின் இனிய இல்லறத்தால் தயனியா என்ற விழுதினை 2009 மார்ச் 14 ம் தேதி ஈன்றெடுத்தோம்.தற்போது சென்னையில் சூளைமேடு எனும் பகுதியில் சந்தோஷமாய் வாழ்ந்து வருகிறேன்....

Search This Blog

Followers