Monday, July 11, 2011

சத்தமில்லா சலனம்...

சத்தமில்லா சலனம்


இதமான காற்று..... என்

இதயத்தை வருட....

ஒளிவிலகி இருள் கவ்வியது...

வானத்தை அண்ணாந்துப் பார்த்தேன்......

ஆங்காங்கே... மேகக்கூட்டங்கள்...

ஒன்றையொன்று மெதுவாய் முத்தமிட்டன

சத்தமில்லாமல்....

சில மேகங்கள்............

சத்தமாய் முத்தமிட்டதும் இடியாய் ஒலித்தது...

சத்தமில்லா முத்தத்தால் சலனமில்லை...

இதமான மிதமான காற்று...

மதமான காற்றாய் மாறி....

சூறாவளியாய் ஊரை உருட்டி புரட்டியெடுத்தது...

புகுந்த இடமெல்லாம்....

கர்வமாய் படர்ந்து பந்தலிட்டிருந்த

ஆல் முதல் அத்திமரம் வரையுள்ள மரங்களை

அடிவேரோடு சாய்த்தது........

கண்ணுக்குத் தெரிந்தயிடமெல்லாம்

சூறைக் காற்றின் கோரத்தாண்டவங்கள்....

கண்களைக் குளமாக்கின............

சத்தமில்லாத சாந்தமான சலனங்கள்....

சாந்தியான வாழ்க்கைக்கு வழி செய்யும்


-மா.பொ

No comments:

Post a Comment

About Me

My photo
Chennai, Tamil Nadu, India
முக்கடலின் திருவேணி சங்கமும் அன்னை குமரிஅம்மனும் வீரத்துறவி விவேகானந்தரின் நினைவுமண்டபமும் பாரததாயின் பாதமுமான கன்னியாகுமரிமாவட்டத்தில் 12 சிவாலய ஆலயங்களில் 11 வது ஆலயமான திருப்பன்றிகோடு ஸ்ரீமாஹாதேவர் குடிகொண்ட மற்றும் பள்ளியாடி பழய பள்ளியப்பன் பள்ளிக்கொண்டுள்ள பள்ளியாடி எனும் ஊரில் மாதவன், கோமதி என்போருக்கு நான்காவது மகனாக பிறந்தவன். வயிற்றுப்பிழைப்புக்காய் வாழ்க்கையின் வசந்தங்களோடு கைகுலக்க வேண்டி சென்னை மாநகருக்கு புலம் பெயர்ந்தவன். வந்த இடத்தில் வாழ்க்கைத்தரம் வளர சென்னைமாநகரம் வாய்ப்பளித்தது.தனிமரமாக வாழ்ந்த நான் கடந்த 2007 மே மாதம் 27ம் தேதி என்னோடு துஷாரா எனும் பெயருடைய இன்னொரு இணை மரத்தையும் என் வாழ்க்கையில் இணைத்துக்கொண்டேன் எங்களின் இனிய இல்லறத்தால் தயனியா என்ற விழுதினை 2009 மார்ச் 14 ம் தேதி ஈன்றெடுத்தோம்.தற்போது சென்னையில் சூளைமேடு எனும் பகுதியில் சந்தோஷமாய் வாழ்ந்து வருகிறேன்....

Search This Blog

Followers