Monday, July 11, 2011

என் எண்ணக்கிறுக்கல்கள்

சமுதாயம்


அரசியல்வாதிகள் அனைவரும்(ஒரிருவர்களைத் தவிர) ஊழல் பேர்வழிகள் இலட்சக்கணக்கான கோடிகளை நாட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் பதுக்கி வைத்திருக்கிறார்கள். நாட்டின் ஒட்டுமொத்த குண்டர்களில் ,சமூகவிரோதிகளில் பாதிக்கும் மேற்பட்டவர்கள்
அரசியல்வாதிகளின் கண்ணவசைப்பிற்கு ஏற்ப செயல்படுபவர்கள். தேர்தல் காலங்களிலும் முழுவேலைநிறுத்த நடைபெறும் போதும் இவர்களின் சமுதாயத்தொண்டுகள் தேவைப்படும் நம்மூர் அரசியல் வாதிகளுக்கு, எனவே அரசியல் வாதிகளும் தொ(கு)ண்டர்களும்
ஒட்டிப்பிறந்த இரட்டைக்குழந்தைகள் ஆகிவிட்டனர். மக்களாகிய நாமும் வேதனையோடு வேடிக்கைப்பார்க்கின்றோம்.....

அதிகார அத்துமீறல்களால் பணபலத்தால் செயற்காயாய் தயாரிக்கப்பட்ட வெற்றிகள்.... கட்சிகளெல்லாம் கார்ப்பரேட் கம்பனிகள்போல மாறிவருகின்றன கட்சிகளின் தலைமைக்கு கோடிகள் கப்பம்கட்டினால்தான் வேட்பாளர்க்ளாக களத்தில்குதிக்கமுடியும் இதுதான் இன்றய நம் நாட்டின் நிலை...... இதனால் சமூகவிரோதிகள் கையில் சிலகோடிகள் இருந்தால்..


அரசியலைபுனிதம் என நினைத்துப்பணியாற்றிய பெருமக்கள் இடம்பெற்ற நம் மக்களவையில் அவர்களும் உறுப்பினர்ஆகிவிட முடிகிறது இவர்களிடமும் நாம் நீதி நேர்மையை எதிர்ப்பார்க்கிறோம் என்ன செய்ய.......

அடுத்து அரசு அதிகாரிகள் மற்றும் அரசு ஊழியர்கள்....


இவர்கள் ஏதோ வானத்திலிருந்து குதித்தவர்களைப்போல செயல்படுகிறார்கள் இலஞ்சம் இல்லா அரசு அலுவலகங்கள் இருந்தால் அது உலக அதிசியம் என்கிற நிலமை... ஒருக்கால் இலஞ்சம் வாங்கத அதிகாரிகளோ அரசு ஊழியர்களோ இருந்தால் பிழைக்கத்தெரியாதவன் என்ற சமுதாயப்பார்வை.... கூடவே அவரை எதிலாவது மாட்டவைக்க காத்திருக்கும் அதிகார வர்க்கம்...

எல்லா அரசு ஊழியர்களுக்கும் சங்கங்கள் இருக்கின்றன... அதில் பெரும்பான்மையானவை இடதுசாரி சார்புடைய சங்கங்கள் தான் இடது சாரிகளோ ஊழலை ஒழிப்பதற்கு மொத்தகுத்தகைக்காரர்கள் போல் பேசுபவர்கள்(அம்மாவின் மற்றும் லல்லுவின் ஊழல்கள்
அவர்களுக்கு விதிவிலக்கு) ஆனால் எந்த ஒருசங்கங்களிலும் இலஞ்சம் வாங்க மாட்டோம் என்றோ கூடாது என்றோதீர்மானமாகவோ அல்லது விதிமுறைகளாவோ ஏற்றுக்கொள்ளப் பட்டுள்ளதாகவோ செய்திகள் இதுவரை இல்லை..

சுருங்கச்சொன்னால் பிறப்பு முதல் இறப்பு வரை இலஞ்சம் தலைவிர்த்தாடுகிறது..... இதில் ஏழைகளும் நடுத்தரவர்க்கத்தினரும் அதிகம்
பாதிக்கப்படுகிறார்கள்......அரசு அலுவலர்களிடம் மட்டும் தவறு இல்லை தவறு நம்மிடமும் தான் இருக்கிறது விதிகளை மீறி காரியங்கள் சாதிக்க நினைப்போம்........ ஆகவே இலஞ்சம் கொடுக்கும் நாமும் சமுதாய வியாதிக்காரர்களே.....


அடுத்தது.... காவல்துறை........

இப்பொழுது காவல்துறை ஏவல்துறை ஆகிவிட்டது.........சட்டவிரோதிகள் சட்டங்களை கையெலெடுத்தால் கைக்கட்டி வாய்மூடி மெளனமாய் நிற்பார்கள்....கொஞ்சம் பணவும் அதிகாரபலவும் இருந்தால் எப்படி வேண்டுமானாலும் காவல்துறையினை கைக்குள்
போட்டுக்கொள்ளமுடியும்.....என்கிறநிலைமைதான் நாடு முழுவதும்... அதற்கு ஒரு உதாரணம் கடந்த சில வருடங்களுக்கு முன்


கேராளவில் நடந்த ஒரு உண்மை நிகழ்ச்சி இது......திருவனந்தபுரம் தொலைத்தொடர்பு அதிகாரிக்கெதிராக போடப்பட்ட வழக்கில் காவல் துறையின் அதிகார அத்துமீறல்கள் வெளிச்சம் போட்டுக்காட்டியது... அதாவது அந்த அதிகாரிக்கும் பக்கத்து வீட்டு பணம் படைத்த ஒருவருக்கும் நடந்த நிலப் பிரச்சினையில் இந்த அதிகாரி அவர்களால் போடப்பட்டிருந்த முள்வேலியை சேதப்படுத்தியதாகவும் பக்கத்து வீட்டுக்காரரை காலால் எட்டி உதைத்ததாகவும் தடுக்க வந்த அவருடைய துணைவியாரை பெண் என்றும் பாரமல் காலல் அப்பெண்ணின் மார்பில் எட்டி உதைத்ததாகவும் காவல் துறையினர் முதல் தகவல்
அறிக்கையில் பதிவு செய்தனர். இதில் வேடிக்கை என்ன வென்றால் காவல் துறையிடம் புகார் மட்டுமே அவர் அளித்தார் ஆனால்
காவல் துறையின வழக்கினை பலப் படுத்துவதற்காக இவர்களாகவே பல கதைகளை புனைந்தார்கள்... அதிகாரியும் கைது நடவடிக்கைக்குப் பயந்து தலைமறைவு ஆனார். முடிவில் வழக்கு நீதி மன்றம் வந்தது நீதிபதியோ கைது ஆணைப்பத்திரம் (Arrest Warrant) வழங்கினார்.... வேறு வழியில்லாமல் அதிகாரி நீதி மன்றத்தில் கீழடங்கினார் (சரணடைந்தார்)நீதிபதிக்கும் அங்கிருந்தவர்களுக்கும் ஒரே அதிர்ச்சி காரணம் யார் காலல் எட்டி உதைத்தார் என காவல்துறையினரால் முதல் தகவல் அறிக்கைபதிவு செய்யப்பட்டதோ அந்த அதிகாரிக்கு கால்களே கிடையாது ஆம் அவர் ஒரு பிறவி ஊனம் சக்கர நாற்காலி இல்லாமல் அவரால் நகரவே முடியாது..........இது ஒருப்பானைச் சோற்றுக்கு ஒரு உதாரணம்.... சமீபத்தில் சட்டக்கல்லூரி வளாகத்தில் கல்லூரி மாணவர்கள் ஒருவரை ஒருவர் கொடூரமாய் மாறிமாறி தாக்கும்ப்போது வாய்மூடி மெளவுனமாய் நின்றக் காட்சி நாம் மறந்து இருக்கமாட்டோம் அதேப்போல் உயர்நீதிமன்ற வளாகத்தில்வழக்கறிஞர்கள் மீது நடத்திய தாக்குதலையும் நாம் மறந்து இருக்க
மாட்டோம்..... இவ்விரு நிகழ்ச்சிகளும் பிரச்சினைகளிலும் காவல்துறையினர் அதிகாரவர்க்கத்தினரின் விருப்பு வெறுப்பிற்கு ஏற்றார்போல் செயல் பட்டனர். இப்படி காவல்துறையினரைப்பற்றி அடுக்கிக்கொண்டே போகலாம்........

அடுத்தது நீதித்துறை......


ஒரு ஐம்பதாயிரம் ருபாய் இருந்தால் நம் நாட்டின் முதல் குடிமகனாம் குடியரசுத்த்லைவருக்கு எதிராகக்கூட கைது ஆணைப்பத்திரம் (Arrest Warrant) நீதிமன்றங்களிலிருந்துப்பெறமுடியும்(போற்றுதல்குரிய நம்முடைய கலாம் அவர்களுக்கு எதிராக வாங்கப்பட்டது) என்ற நிலைதான்... பலவழக்குகள் கூட அதிகாரவர்க்கத்தால் நீதிமன்றங்களில் திசைமாறி பயணித்து இருக்கிறது இன்றும் பயணித்துக்கொண்டிருக்கின்றன....... நீதிபதிகளின் நியமனங்களில் கூட அரசியல் தலையீடுகள் இருக்கலாம்........... ஒருவர் தன் உரிமையியல் வழக்குக்காய்(Civil Case) நீதிமன்றங்களை நாடினால் அவர் நீதிக்காய் நீண்டகாலங்கள் காத்திருக்க வேண்டும் அதனால் நீதிமன்றங்களெல்லாம் நீண்டமன்றங்களாய் மாறி வருகின்றன இவ்வுளவு பெரிய மக்கள்த்தொகைக் கொண்ட நாட்டில் வழக்குகளின் எண்ணிக்கை அதிகமாகத்தான் இருக்கும் அதனால் நீதி
கிடைப்பதற்குத்தாமதம் ஆகும் தான் ஆனால் இதற்கு தீர்வு என்ன ? நடமாடும் நீதிமன்றங்களை நிறுவினோம் ஆனாலும் காலத் தாமதம் ஏற்படத்தான் செய்கிறது..... என்னத்தான் தீர்வு மக்கள் வளம் நிறைந்த நாட்டில் நீதித்துறையை சார்ந்தவர்களுக்காப்பஞ்சம்? நீதித்துறையில் பணியிடங்களை அதிகப்படுத்த முயற்சிக்கலாம் தானே.....நீதி ஏழைக்கும் நடுத்தர வர்க்கத்தினர்க்கும் என்றுமே
எட்டாக்கனிதான்.அரசியல் வாதிகள் செய்கின்ற ஊழல்களுக்கு எதிரானத் தீர்ப்புகள் பெரும்பாலும் நிரபராதிகள் எனத்தீர்ப்பு வழங்கப்படுகின்றன......... எந்த அரசியல்வாதிகளும் தண்டிக்கப்பட்டதாய் சரித்திரமில்லை அப்படி ஒருவேளைத்
தண்டனைக்கொடுக்கப்பட்டால் இருக்கிறது மேல்முறையீடு.. கோடிகள் கொள்ளை அடித்தாலும் தேசியக்கொடி தன் வாகனத்தில்
பளப்பளக்க பவனி வருகின்றனர் நீதி மன்றங்களின் தயவால். இது இந்நாளுக்கும் பொருந்தும் முன்னாளுக்கும் பொருந்தும்.....

ஆனால் குப்பனும் சுப்பனும் தவறு செய்தால் பறந்து வருகிறது தண்டணை இது ஏன் புரியவில்லை சுப்பனுக்கும் குப்பனுக்கு வழங்கும் தண்டனை ஏன் நீதி மன்றங்களால் நம் அரசியல்வாதிகளுக்கு வழங்கப்படுவதில்லை......வழக்கறிஞர்கள் காசும் அதிகார பலவும் இருந்தால் எத்தனைப் பெரியத் தவறுகள் செய்தாலும் வக்காலத்து வாங்குவார்கள்...வழக்கின் தன்மையைப்பற்றி அதில் உள்ள நீதி அநீதிகளைப் பற்றியோ கவலைப்படும் வழக்கறிஞர்கள் வெகு சிலரே....காசு செலவழித்தால் எத்தகைய வழக்காக இருந்தாலும் தன் வாதத்திறமையால் குற்றாவாளிகளை சட்டத்தின் முன்பாக தப்பிக்கச் செய்கிறார்கள் அதற்கு ஒரு உதாரணம்.... கடந்தசில வருடங்களுக்கு முன் ஒரு பல்கலை கழகத்தின் துணை வேந்தரின் ஒரே மகனான

திருநாவுக்கரசு என்ற மருத்துவக்கல்லூரி மாணவனின் கொலைவழக்கு நமக்கு அனைவருக்கும் நினைவு இருக்கும் என நினைக்கிறேன்.. ஜாண்டேவிட் என்கிற சக மாணவன் ராகிங் என்ற பெயரில் அறுவை சிகிச்சைக்குப் பயன்படும் கருவிகளின் துணையோடு திருநாவுக்கரசு என்ற மாணவனை கொலை செய்து கண்டம் துண்டமாக் வெட்டி கோணிபையினில் திணித்து பேருந்தில்
ஏற்றி சென்னைக்கு அனுப்பி விட்டான்..... ஆனால் வழக்கறிஞரின் வாதத்திறமையால் அந்தக்கொடூர மாணவன் குற்றவாளியில்லை என நீதிமன்றத்தால் தீர்ப்பு வழங்கப்பட்டது.....ஆனால் இன்று வரை திருநாவுக்கரசு எப்படி செத்தான் என்றோ ஜாண்டேவிட் கொலை செய்யவில்லையென்றால் வேறு யார் கொலைச் செய்தார்கள் என நீதிமன்றங்கள் இதுவரை தெளிவுப் படுத்தவில்லை...ஒருவேளை திருநாவுக்கரசு தன்னைத்தானே கொலைசெய்து கோணிப்பைகுள் நுழைந்து பேருந்தில் பயணித்தானோ என்னவோ என
நீதி மன்றங்கள் நினைக்கிறதோ?....... நல்ல வாதத்திறமை உள்ள வழக்கறிஞர் இருந்தால் எந்த வழக்கினையையும் எப்படி பட்டவர்களின் வழக்காக இருந்தாலும் வளைத்து விடலாம்.... என்ற நிலமைதான் இன்றும் நம் நாட்டில்.....

சுகாதரத்துறை........

உலகில் நாம் அனைத்துறைகளிலும் பின்தங்கி இருந்தாலும் சுகாதரசீர்கேட்டில் இன்னும் முன்னிலையில் தான் இருக்கிறோம்.....கூவம் நதியினை சுத்தப்படுத்துகிறோம் என காலங்காலமாய் ஆட்சிகள் மாறினாலும் அறிக்கைகள் மாறவில்லை கங்கை நதியினையும் பல்லாண்டுகாலமாய் சுத்தப்படுத்துவோம் என கூறிக்கொண்டிருக்கிறோம் ஆனால்
அரசாங்ககளின் கருவூலங்கள்தான் சுத்தமாயின குப்பைத்தொட்டி இருக்கும் ஆனால் நடந்து செல்வதற்கு சோம்பல் பட்டு வீதிகளில் வீசிகிறோம், தொற்று நோய்களின் மொத்தக் குத்தகை காரர்கள் ஆகி விட்டோம் மனிதக்கழிவுகளை மனிதனே அள்ளும் முறைகளும் சாக்கடை கழிவு நீர் நிலைகளில் இன்றும் நம் சகமனிதனே மூச்சடைக்கி இற மூழ்கி வேலைப்பார்க்கிறான்.. நிலவுக்குக் கூட நாம் ராக்கெட் விட்டாச்சு ஆனால் அரசு மருத்துவனைகளில் லஞ்சமில்லாமல்
பிணவறைக்குக்கூட செல்லமுடியாது,..... நோய்க்கு போதிய மருந்து இருக்காது அவசர நோயாளிகளை உதாசீனப்படுத்தப்படுதல்சரியான சிகிச்சை முறையில்லாமல் இன்றும் பல கர்ப்பிணிகள் உயிர் இழக்கும் சோகம் நடைப்பெற்றுக்கொடுதான் இருக்கிறது
அதிகார வர்க்கத்தினர்க்கு நட்சத்திர தரமுள்ள மருத்துவ சேவை இலவசமாகவே கிடைக்கிறது.....
பல அரசுமருத்துவமனகள் சுகாதர சீர்கேடுகளின் மொத்தகுத்தகையாக இருக்கிறது உலகத்தரம் வாய்ந்தது என்பார்கள் ஆனால் உருப்படியாய் எதுவும் இருக்காது.......... தாதியர்களின் சிடுசிடுப்பு சுகாதர சீர்கேடுகாள்..............எனப்பலப்பிரச்சினைகள்.........

கல்வித்துறை........
மாதிரிப்பள்ளிகள்(Matriculation or Model School) மலிந்ததனால் அரசுப்பள்ளிகள் ஆரவாரமில்லாம் களையிழந்து காணப்படுகிறது பல பள்ளிக்கூடங்கள் மாணவர்கள் இல்லாமல் மூடப்பட்டு வருகின்றன.... எதனால் இப்படி ஆனது ஆங்கில வழிப்படித்தால்தான்
சமுதாய அங்கிகாரம் எனும் நிலை... ஆசிரியர்களின் அலட்சியப்போக்கு தன் பிள்ளைகளை தரமான பள்ளிகளில் சேர்த்து விட்டு ஊரார் பிள்ளைகளின் எதிகாலத்தில் விளையாடிக்கொண்டிருக்கிறார்கள்... வகுப்பில் சரியாக பாடம் நடத்துவது இல்லை ஆனால்
தனியாக கட்டணம் வசூலித்து தனி வகுப்புகள் எடுப்பார்கள் வருடத்திற்கு வருடம் தேரிச்சி விகிதம் அதிகரிக்கிறதோ இல்லையோ ஆனால் சம்பள விகிதம் மட்டும் அதிகரிக்கிறது ஆட்சியாளர்களின் தயவால்..... மாணவசெல்வங்களின் அறிவுக்கண்ணைத் திறப்பதற்கு
பதில் அவர்களை தன் சுயநலத்திற்காய் தன் சொந்த வேலைகளைக்கூட செய்யப்பணிக்கிறார்கள் இன்னும் சில கிராமங்களில்...
ஏழைக்குழந்தைகள் மாநகாரட்சி மற்றும் அரசு பள்ளிகளில் படிக்க அப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் குழந்தைகள் தரம் வாய்ந்த தனியார்ப்பள்ளிகளில் பயில்கின்றனர்.. உணவுவிடுதி நடத்துபவர் தன் விடுதியில் உணவு உட்கொள்ளாமல் பக்கத்து விடுதியில் உண்பதற்கு ஒப்பாகும் இது... ஆசிரியர்களின் குழந்தைகளும் அரசு பள்லிகளில் படிக்கும் நிலமை எப்போது வருகிறதோ அப்போழுதுதான் அரசு பள்ளிகளின் தரம் உயரும் அரசு பள்ளிகள் தரம் கெடுவதற்கு மக்களாகிய நாமும் ஒரு காரணம் தான்... அரசுப்பள்ளிகளின் அவல நிலைகளால் தனியார் பள்ளிகள் மீது மோகம் கொண்டோம்.... அதன் விளைவு கல்வி யாபரப்பொருளானது பள்ளிகளின் அமைவிடத்தைப்பற்றி பெருதாக கவலைப் படவில்லை நாம் பள்ளிகள் நிறுவும் போது கடைப்பிடிக்க வேண்டிய சட்டத்திட்டங்களை அரசு அதிகாரிகளின் ஆசியோடு காற்றில் பறக்க விட்டதன் விளைவுதான் சமீபத்தில் கும்பகோணத்தில் நூற்றுக்கணக்கான பிஞ்சுக் குழந்தைகளை தீக்கிரையாக்கினோம் கும்பகோணத்தில்..........கல்வி இன்று பாரப்பொருளாகிவிட்டது..... உலகத்திற்கே கல்வி சாலைகள் பல அமைத்து இலவசமாக கல்வியை வாரிவழங்கிய நம் நாட்டில் கல்வியை வியாபரப்பொருளாக்கிவிட்டோம்.. அன்று பச்சையப்பவள்ளலும் அண்ணாமலைச்செட்டியாரும் போன்றவர்கள் பலகல்விசாலைகளை நிறுவி தொண்டுள்ளத்தோடு செயல் பட்டனர் ஆனால் இன்று கள்ளுந்தைகளும் குண்டர்களும் அரசியல் வியாபாரிகளும் கல்வித் தந்தையர் வேடம் பூண்டுள்ளனர்.

மேலச் சொல்லப்பட்ட சமூக அவலங்களுக்குக் காரணம் யார்..... நிச்சயமாக மேலே சொல்லப்பட்டவர்களல்ல.....

பின் வேறு யார்..... நாம் தான் ஆம் நம் சமுதாயந்தான்..... அரசியல்வாதிகள், அரசு ஊழியர்கள்,காவல்துறை அதிகாரிகள்


நீதித்துறையைச் சார்ந்தவர்கள்,மருத்துவர்கள் , வழகக்றிஞர்கள், ஜாண்டேவிட்டுகள், நவீன கல்வித்தந்தையர்கள்,கல்வித்துறை அதிகாரிகள், ஆசிரியப்பெருமக்கள் அனைவரும் எங்கிருந்து வந்தவர்கள்... நாம் சார்ந்த, நம் சமூகத்திலிருந்துப் புறப்பட்டவர்கள் தான் அல்லாமல் புதிதாய் தோன்றியவர்களில்லை இவர்கள்.... இவர்களெல்லாம் திடீரென்று உருவானவர்களுமல்ல
கொஞ்சம் கொஞ்சமாய் பல்கிப் பெருகியவர்கள் இவர்கள்.....நாம் தான் இவர்களையெல்லாம் நம் தேசத்தில் செல்வாக்கோடு சொல்வாக்கோடு சமூதாய அங்கீகாரத்தோடு வளையவிட்டோம் அதன் பலன் இவர்ளைப்போன்று பலரும் பல்கிப்பெருகினார்கள்..
ஆகவே இந்த சமூதாயத்தில் இப்படிப்பட்டவர்கள் மீண்டும் நம்மில் உருவாகமல் இருக்க முதலில் நாம் அவர்களுக்கு சமூக அங்கீகாரம் அளிக்கக்கூடாது நாம் அவர்களுக்குக் கொடுக்கின்ற அங்கீகாரம் நமக்குப்பிறகு வரும் சந்ததியினருக்கு ஒருத் தவறான முன்னுதாரணம் ஆகிவிடும். நாம் நம் பிள்ளைகளை மருத்துவர்களாக, பொறியியல் வல்லுநர்களாக
அதுவும் மென்பொருள் பொறியாளர்களாக உருவாக்க அதிக ஆர்வம் காட்டுகிறோம் வழக்கறிஞர்களாக என பலவாறு உருவாக்க முயற்சிக்கிறோம் ஆனால் நாம் யாருமே அவர்களை நல்ல மனசாட்சியுள்ள குண நலன்கள் உள்ள நல்ல மனிதர்களாக உருவாக்க
முனையவில்லை நிச்சய மாக அனைவருக்கும் நம் பிள்ளைகள் நல்ல மனிதனாக இந்த சமுதாயத்தில் வாழ வேண்டும் என்ற எண்ணம் இருக்கும் கனவு இருக்கும். ஆனால், எண்ணம் வேறு அதற்கு வேண்டிய செயல் பாடு வேறு கனவு வேறு அதை நனவாக்கும் குறிக்கோள் வேறு வேறு. எண்ணதையும் கனவினையையும் அடையும் வழி என்ன?

ஏட்டுக்கல்வியை மட்டுமே புகுத்தாமல் பண்பு பயிற்சியினை வருங்கால சந்ததியினருக்கு புகட்ட வேண்டும்......

புனித நூல்கள் புனிதர்களின் வாழ்க்கை வரலாறுகளை புகட்ட வேண்டும், கீதையின் பாதயை, இதிகாசங்களை, நான்கு வேதங்களை நாலாயிர திவ்யப்பிரபந்தங்களை திருக்குறளை,தேவரத்தை திருவாசகத்தை கற்றுக் கொடுக்கப்பட வேண்டும் நம் நாட்டின் பெருமைகளை அவதாரப்புருஷர்களை விஞ்ஞான மேதைகளை வீரசிவாஜியின் வீரத்தை விவேகானந்தரின் குருபக்தியை நேதாஜியின் தேசபக்தியை அவரின் சிந்தனைத்துளிகளை காந்தியின் வாழ்க்கை முறையை கற்றுக்கொடுக்கவேண்டும். மேல சொன்னவை எல்லாம் நம் பள்ளிக்கூடங்களில் பாடங்களாக இருக்கத்தான் செய்கிறது பின் ஏன் மறுபடியும் கற்றுக்கொடுக்கவேண்டும் என் எண்ணுகிறோமா அப்படியென்றால் நம் எண்ணம் தவறு ஏனேனில் அவையெல்லாம் மதிப்பெண் எடுப்பதற்காக வாழையடி வாழையாக உரு போட்டு மாணவர்களால் மனப்பாடம் செய்யப்பட்டு தேர்வுக் காலங்களில் ஒப்புக்காய் ஒப்புவிக்கப்படுகிறது. இவற்றையெல்லாம் வாழ்க்கையில்
கடைப்பிடிக்க வேண்டும் என்று நம் மாணவ மணிகளுக்கும் வருங்கால் சசந்ததியினருக்கும் உணர்த்தவில்லை ஒரு போதும் மாறக அவர்களை மதிப்பெண் எடுக்க வைக்க மட்டுமே தூண்டினோம் மதிப்பெண்ணும் வேண்டும் நாலு பேர் மதிக்கும் படியும் வாழ வேண்டும் என்பதையும் அறிவுறுத்துவோம். நம்முடைய பாடத்திட்டமானது ஆங்கிலேயன் மேக்காலேவால் ஒருவாக்கப்பட்டது....

மேகலே நம்முடைய கல்வித்திட்டத்தை உருவாக்கிவிட்டு தன் ஆங்கிலேய தலைமைக்கு இவ்வாறாக எழுதியிருக்கிறான் நான் பாரத்தின் அனைத்துபகுதிகளுக்கும் குறுக்கும் நெடுக்குமாக மேலும் கீழுமாக சுற்றி வந்திருக்கிறேன் இங்கெல்லாம் என்னால் ஒரு பிச்சைக்காரனையோ ஒரு திருடனையோ பார்க்கமுடியவில்லை இந்த நாடு பெரும் செல்வ செழிப்புள்ள நாடாக விளங்குகிறது
மிகச்சிறந்த குண நலன்களை கொண்டவர்களாக இருக்கிறார்கள் எனவே நம்மால் இவர்களை வெல்வது மிகவும் கடினம் ஆனால் இந்த நாட்டின் முதுகெலும்பாக இருக்கும் ஆன்மீகம், மிகவும் பழமை வாய்ந்த கலாச்சாரம் அடையாளங்களை உடைத்தெறிய வேண்டும் அதற்கு அவர்களின் புரதானமான கல்வி முறையை மாற்றி அமைக்க வேண்டும் அவர்களின் கலாச்சாரத்தை சீர்குலைக்க வேண்டும். அவர்கள் மனதில் மேற்கத்திய கலாச்சாரவும் மொழியும் தான் உலகில் தலை சிறந்தது என அவர்கள் மனதில் தோன்றச்செய்தால் அவர்களுடைய சுய அடையாளத்தையும் கவுரவதையும் நாட்டுப்பற்றயும் கலாசாரத்தையும் இழப்பார்கள் அதன்
பின் அவர்களையும் பாரதத்தையும் நம் ஆளுமைக்கு எளிதில் கொண்டு வரலாம் . அதோடு மட்டுமல்ல ஒருவேளை வரும் காலங்களில் நாம் இந்த நாட்டை விட்டு வெளியேறினாலும் அவர்கள் உடலளவில் இந்தியர்களாக இருப்பார்கள் ஆனால் மனதளவில் மேற்கத்திய சிந்தனைகள் மேலோங்கியிருக்கும் என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளான் (1835/பிப்-2) நண்பர்களே இப்படி பட்ட ஒரு ஆசாமியின் எண்ணத்தில் உருவான கல்வி முறை எப்படி இருக்கும். இதன் விளைவாகத்தான் ஷெல்லியையும் ஷேக்ஷ்பியரையும் பற்றி படித்த அளவுக்கு பாரதியையும் தாகூரையும் பற்றி நாம் அதிக அளவில் படிக்க வில்லை. நெப்போலியனின்
வீரத்தைப் பற்றி படித்த அளவுக்கு வீர சிவாஜிய பற்றி கற்றுத் தரவில்லை கிரேக்கதை சொன்னவர்கள் லேமூரியக்கண்டத்தை பற்றி வாயேத்திறக்கவில்லை. ஆக்ஸ்போர்ட் பல்கலை கழகத்தைப் பற்றி பீற்றிக்கொள்பவர்கள் மேற்கத்தியர்கள் நாகரிகம் அடைவத்ற்கு முன்பாக இங்கெ இருந்த நாலந்தா பல்கலை கழகத்தைப் பற்றி மூச்சே விடவில்லை. நாலந்தாவைப் பற்றி நல்லா நாலு வரி சொன்னாங்க ஆனா விரிவா எதையும் இன்னும் சொல்லிக்கொடுத்தப்பாடில்லை.ஆனாலும் உலகில் தோன்றிய கலாச்சாரங்கள்
அனைத்தும் அழிந்த பின்னும் நம் கலாச்சாரம் இன்னும் கொஞ்சமாய் வாழ்கிறது ஏனெனில் இந்நாட்டி கலச்சாரம் மறக்காத மக்கள் கொஞ்சம் இன்றும் வாழ்ந்து கொண்டிருப்பதால்......... ஆகவே நாம் சிந்திப்போம் செயல் படுவோம்



- எண்ணகிறுக்கல்கள்

மா.பொ....

No comments:

Post a Comment

About Me

My photo
Chennai, Tamil Nadu, India
முக்கடலின் திருவேணி சங்கமும் அன்னை குமரிஅம்மனும் வீரத்துறவி விவேகானந்தரின் நினைவுமண்டபமும் பாரததாயின் பாதமுமான கன்னியாகுமரிமாவட்டத்தில் 12 சிவாலய ஆலயங்களில் 11 வது ஆலயமான திருப்பன்றிகோடு ஸ்ரீமாஹாதேவர் குடிகொண்ட மற்றும் பள்ளியாடி பழய பள்ளியப்பன் பள்ளிக்கொண்டுள்ள பள்ளியாடி எனும் ஊரில் மாதவன், கோமதி என்போருக்கு நான்காவது மகனாக பிறந்தவன். வயிற்றுப்பிழைப்புக்காய் வாழ்க்கையின் வசந்தங்களோடு கைகுலக்க வேண்டி சென்னை மாநகருக்கு புலம் பெயர்ந்தவன். வந்த இடத்தில் வாழ்க்கைத்தரம் வளர சென்னைமாநகரம் வாய்ப்பளித்தது.தனிமரமாக வாழ்ந்த நான் கடந்த 2007 மே மாதம் 27ம் தேதி என்னோடு துஷாரா எனும் பெயருடைய இன்னொரு இணை மரத்தையும் என் வாழ்க்கையில் இணைத்துக்கொண்டேன் எங்களின் இனிய இல்லறத்தால் தயனியா என்ற விழுதினை 2009 மார்ச் 14 ம் தேதி ஈன்றெடுத்தோம்.தற்போது சென்னையில் சூளைமேடு எனும் பகுதியில் சந்தோஷமாய் வாழ்ந்து வருகிறேன்....

Search This Blog

Followers