Monday, July 11, 2011

குமுறலுடன்

வாழ்க ஜனநாயகம்..... வாழ்க தமிழ்! வாழ்க தமிழன்!!....


பக்கத்துத்தீவிலே பசியால் பட்டினியால் - இங்கோ

தமிழ் தமிழன் என ஒப்பாரி வைத்து விட்டு....

பதவிக்காய் பரிதவிப்போடு பறக்கிறது

தள்ளாத வயதிலும்....

மகனுக்கும் பேரனுக்குமாய் பதவி பேரங்கள் நடத்தியும்

பணியாத காரணத்தால் மிரட்டிக் காரியம் சாதித்தார் எங்கள்

சமூகப் போராளி ..... சமூகநீதிப்போராளி

வெளியிலிருந்து ஆதரவு எதற்காக....

காவிரி நீருக்கு வேண்டியா இல்லை

ஹொக்கெனக்கல் திட்டத்திற்காவா இல்லை

பெரியார் அணைப்பிரச்சினைக்காவா இல்லை

எம்தொப்பிள்கொடி உறவு அங்கே

சிங்கள கொடிந்தேசத்தில்

புனர் வாழ்வு முகாம் என்ற பெயரில்

கொட்டடிச் சிறையில் மரணத்தின் வாசலை

சத்தமில்லாமல் முத்தமிட்டுக்கொண்டு......

உண்ண உணவும் உடுக்க உடையும் இல்லாமல்...

கஞ்சிகுடிப்பதும் அங்கே தான் கழிவறைகளும் அங்கேதான்

எனக்காலனின் வருகைக்காய் காத்திருக்கும்

எம் கண்மணிகளுக்காக வேண்டியா இல்லை இல்லை ஒரு போதும் இல்லை

மகனுக்கு மகுடம் சூட்டவும் பேரனுக்கு பெரும்பதவி வேண்டியும் முடிந்தால்

மகளுக்கு மணி மகுடம் சூட்டவும் வேண்டித்தான் இந்த பதவிப்பேரங்கள்...

காவிரியில் தண்ணீர் வந்தால் என்ன வராட்டி என்ன

ஹொக்கெனக்கல் திட்டம் நடந்தால் என்ன நடக்காட்டி என்ன

பெரியார் அணைப்பிரச்சினை தீர்ந்தால் என்ன தீராட்டியென்ன...

தமிழன் செத்தால் என்ன இருந்தால் என்ன

எனக்கும் என் குடும்பத்திற்கும் பதவியிருந்தால் போதும்...

என் குடும்ப கருவூலங்கள் நிரம்பி வழிந்தால் போதும்..

மன்னராட்சி முடிந்து மக்களாட்சியாம்...

சிரிப்புதான் வருகிறது....

தம் மக்களுக்கு முடிசூட்டுவதுதான்

(தம்) மக்கள் ஆட்சியோ யார் கண்டது ...

விளக்கவுரை வந்தாலும் வரும் முரசொலியில் - அன்று

தன் ஊழலை மறைப்பதற்காக காவிரி நீரை

அடகு வைத்தார் அன்னை இந்திராவிடம்... பின்

கச்சத்தீவையும் பணையம் வைத்தப்போது

பேசமடைந்தையாய் ஆமாம் சாமியானார் நம் பேச்சாளர்

ஹொக்கெனக்கலைக் கூட்டணிக்காய் காவுகொடுத்தார்...

பெரியார் அணை விவகாரம் அறிக்கைக்களோடு அடங்கிப்போனது...

அவற்றிற்கேல்லாம் மேலாக....

உயிர்பிச்சைக் கேட்கும் தமிழனை புறந்தள்ளி விட்டு

தன் ஒரு தாலிக்காய்.....

பல இலட்ச தமிழ்ப் பெண்களின் தாலியறுப்புக்கு

தலையசத்த அன்னிய மண் அன்னையிடம்(?)

பதவிப் பிச்சைக்கேட்கிறார்...

அன்னிய சோனியாவை அன்னை சோனியா என்கிறார்

இவர் அகராதியில் தமிழன் இரத்தத்தை குடிப்பவர்களெல்லாம்

அன்பே வடிவானவர்களா.....கடைசியாய் கடவுளிடம் கேட்கிறேன்

அரக்கன் ராஜபக்ஷேயை இவர்கள்

அருட்த்தந்தையென அழையாமலிருக்க

அருள் புரியட்டும்.....





குமுறலுடன்



மா.பொ

No comments:

Post a Comment

About Me

My photo
Chennai, Tamil Nadu, India
முக்கடலின் திருவேணி சங்கமும் அன்னை குமரிஅம்மனும் வீரத்துறவி விவேகானந்தரின் நினைவுமண்டபமும் பாரததாயின் பாதமுமான கன்னியாகுமரிமாவட்டத்தில் 12 சிவாலய ஆலயங்களில் 11 வது ஆலயமான திருப்பன்றிகோடு ஸ்ரீமாஹாதேவர் குடிகொண்ட மற்றும் பள்ளியாடி பழய பள்ளியப்பன் பள்ளிக்கொண்டுள்ள பள்ளியாடி எனும் ஊரில் மாதவன், கோமதி என்போருக்கு நான்காவது மகனாக பிறந்தவன். வயிற்றுப்பிழைப்புக்காய் வாழ்க்கையின் வசந்தங்களோடு கைகுலக்க வேண்டி சென்னை மாநகருக்கு புலம் பெயர்ந்தவன். வந்த இடத்தில் வாழ்க்கைத்தரம் வளர சென்னைமாநகரம் வாய்ப்பளித்தது.தனிமரமாக வாழ்ந்த நான் கடந்த 2007 மே மாதம் 27ம் தேதி என்னோடு துஷாரா எனும் பெயருடைய இன்னொரு இணை மரத்தையும் என் வாழ்க்கையில் இணைத்துக்கொண்டேன் எங்களின் இனிய இல்லறத்தால் தயனியா என்ற விழுதினை 2009 மார்ச் 14 ம் தேதி ஈன்றெடுத்தோம்.தற்போது சென்னையில் சூளைமேடு எனும் பகுதியில் சந்தோஷமாய் வாழ்ந்து வருகிறேன்....

Search This Blog

Followers