Monday, July 11, 2011

சில ஓவியங்களும் ஓசைகளும்............

சில ஓவியங்களும் ஓசைகளும்...........

 அம்மா..... அன்று நீங்கள் என் பாதங்களை
 பாதிப்புகளிலிருந்து பாதுக்காக....
உன்பாதத்தில் என் பாதத்தை வைத்து
பாதுகாவினை(காலணி) பாசமாய்
அணிவித்தாய்.....
உன்னில் ஒரு மருத்துவ குணத்தை
நானின்று உண்ர்ந்தேனம்மா....

நான்...
சிறகு முளைக்காத சிட்டுக்குருவியாய்
சிகரங்ளைத் தொடத்தாவியபோது
எனை உன் சிர மேல் தூக்கி வைத்து
சிறகானாய்.... நீ எனக்கு....
உலகினை நீ எனக்கு அடையாளம்
காட்டியதை நானின்று அறிந்தேனம்மா...

நான்....
வாழ்க்கையெனும் ஓடத்தில்
தடுமாறமாறும் போது..
தோளோடு தோள் சேர்த்து
தட்டிகொடுத்து தாயுள்ளத்தோடு
தாங்கமும் செய்தாய்....
வாழ்க்கையின் வசந்தங்களையும்
வலிகளையும் நீயன்று உணர்த்தியதை
நானின்று உணர்ந்தேனம்மா

நான்....
மாணவனாயிருந்தபோது
பள்ளிப்பாடத்தோடு
வாழ்க்கைப் பாடத்தையும்
சேர்த்தே கற்றுகொடுத்தாய்...
நீ அன்ர்றெனக்கு....
சொல்லித்தந்த வாழ்க்கைப்பாடம் தான்
இன்றும் என்னை.....
வாழ வைத்துக்கொண்டிருக்கிறது...
உன்னில் ஒரு நல்லாசானை
நானின்று உணர்ந்தேனம்மா....

நான்...
களைப்பினால்...
கண்ட இடங்களில்
கண்மூடித் தூங்கிடுவேன்
என நினைத்து..உன் தோளில்
எனை சாய வைத்து.....
சந்தோஷப் பட்டாயம்மா.....
தாயுள்ளத்தை நீ எனை
தாங்கியதை உன் ஸ்பரிசத்தால்
நானின்று உணர்ந்தேனம்மா...

அம்மா...
உன் வசிப்பிடம் பட்டணமானதால்
என் பாட்டி என்னோடு இல்லை
இருந்தும்....
உன் அம்மாவும் பாட்டியும்
உனக்கு சொன்னக் கதைகளை
எனக்கும் சொன்னாய்.....
நம் தலைமுறைகளின் வேர்களை...
ஊன்றியதை என்னில்....
நானின்று உணர்ந்தேனம்மா


அம்மா...
நான் தனியாய்....
தவழ்ந்த காலங்களில்
என் கைகால்களையாட்டி
கெக்கே பிக்கேயென்று குரெழுப்பி
நான் தனியாய்....
விளையாடிய போது
நீ துணையாய்.... என்னுடன்
விளையாடி இன்புற்றாய்...
நீ நல்லத் தோழியாய்
தோள்க் கொடுத்ததை என்னில்
நானின்று உணர்ந்தேனம்மா....

அம்மா....
கால் முளைத்த நாள் முதலாய்....
நான் ஆட்டம் போட்டு...
அழுக்கான என் ஆடகைளை
அழுக்கறத் துவைத்து...
வரிசையாய் கொடியில் காய வைத்து
அழகாய் அடுக்கிவைத்தாய்.......
நீ எனக்கு ....
செயல் நேர்த்தியை உணர்த்தினாய்...
அன்று நீ உணர்த்தியதுதான்
இன்றுமெனை செயல் நேர்த்தியோடு
வாழ வைத்திருக்கிறது....

அம்மா...
நான் கேட்காமல்...
அத்தனையும் எனக்காய் செய்தாய்...
நான் உனக்காய் என்ன செய்யப்போகிறேன்
பட்டணத்தில் உனைப்பிரிந்திருந்த போதும்
நான் உணர்கிறேன் அம்மா உன் குரலை
எனக்கென்று எதுவும் வேண்டாமென
நீ சொல்வதை....
ஆனாலும்...
அடி மனதில் ஒரு அழுத்தம்...
எதாவது செய்ய வேண்டும்
நான் உனக்கு.... ஆம்
அடுத்தத் தலைமுறை அம்மாக்களுக்கும்
உன்னில் என்னையுணர்ந்த
நுகர்ந்த நல் உன் உணர்வுகளை
என்றும் உணர்த்துவெனம்மா......


-மா.பொ

No comments:

Post a Comment

About Me

My photo
Chennai, Tamil Nadu, India
முக்கடலின் திருவேணி சங்கமும் அன்னை குமரிஅம்மனும் வீரத்துறவி விவேகானந்தரின் நினைவுமண்டபமும் பாரததாயின் பாதமுமான கன்னியாகுமரிமாவட்டத்தில் 12 சிவாலய ஆலயங்களில் 11 வது ஆலயமான திருப்பன்றிகோடு ஸ்ரீமாஹாதேவர் குடிகொண்ட மற்றும் பள்ளியாடி பழய பள்ளியப்பன் பள்ளிக்கொண்டுள்ள பள்ளியாடி எனும் ஊரில் மாதவன், கோமதி என்போருக்கு நான்காவது மகனாக பிறந்தவன். வயிற்றுப்பிழைப்புக்காய் வாழ்க்கையின் வசந்தங்களோடு கைகுலக்க வேண்டி சென்னை மாநகருக்கு புலம் பெயர்ந்தவன். வந்த இடத்தில் வாழ்க்கைத்தரம் வளர சென்னைமாநகரம் வாய்ப்பளித்தது.தனிமரமாக வாழ்ந்த நான் கடந்த 2007 மே மாதம் 27ம் தேதி என்னோடு துஷாரா எனும் பெயருடைய இன்னொரு இணை மரத்தையும் என் வாழ்க்கையில் இணைத்துக்கொண்டேன் எங்களின் இனிய இல்லறத்தால் தயனியா என்ற விழுதினை 2009 மார்ச் 14 ம் தேதி ஈன்றெடுத்தோம்.தற்போது சென்னையில் சூளைமேடு எனும் பகுதியில் சந்தோஷமாய் வாழ்ந்து வருகிறேன்....

Search This Blog

Followers