Monday, July 11, 2011

ஆங்கில புத்தாண்டு....

ஆங்கிலப்புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

புத்தாண்டன்று.....(தமிழ்)

புத்தாடையுடுத்தி புன்சிரிப்புடன்

ஒருவருக்கொருவர் வாழ்த்துக்கள் சொல்லி

படையல் போட்டு...

சாமியிடம் மனமுருகி வேண்டி

மகிழ்ந்திருந்த காலம் போய்

ஆங்கில புத்தாண்டன்று....

அன்னிய அநாகரிக கலாச்சாரத்திற்கு

நாம் அடிமையானதால்....

பேய் கூச்சலும் அநாகரிக ஆட்டம் பாட்டங்களும்

தமிழனை தழுவி காலம் பல கடந்தாகிவிட்டது....

உயர்தொழில் நுட்பங்களனைத்தையும்

உலகோரிடமிருந்து உள் வாங்கிய நாம்

சமூகத்தில் ஊனமான அவர்களின்

கலாசாரத்தை ஏன் நாம் உள் வாங்கவேண்டும்

இன்று.....

புத்தாண்டை வரவேற்கிறோம் என்ற போர்வையில்

கேளி(லி)க்கை விடுதிகள் பல

கரிசனமாய் கடைவிரிக்கின்றன நம்

கலாசாரத்தை களங்கப்படுத்த

தனியாக வருவோருக்குத் தனிக்கட்டணமாம்

துணையோடு வருவோருக்கு....

துச்சமானக் கட்டணமாம்.... என

மின்னஞ்சல், பிரசுரங்கள் மூலமாக.

புத்தாண்டு களியாட்டங்களில்

களம் புகாதவர்களை பிற்போக்குவாதிகளென

முத்திரைக்குத்தும் விதமாய்....

மூளைச்சலவை செய்தன.....

சின்னத்திரை உலகமோ......

பெயருக்கு ஒரு ஆசியுரை பின்

சாத்திரத்திற்கு ஒரு பட்டிமன்றம்

அதன் பின்.....

பெரியத்திரை குத்தாட்ட குஜிலிகளின்

மனம் கூசும் குத்தாட்ட அலப்பறைகளை

குடும்பத்துடன் பாருங்கள் என

கூக்குரல் இடுகின்றன...

பலக்கலாச்சார காவலர்களின்

தொ(ல்)லைக் காட்சி நிறுவனங்கள்

முத்தாய்பாய்....

'ஆ' என்றால் ஆகம விதியென அலறும்

ஆலய அர்ச்சகர்களும் அறங்காவலர்களும்

ஆகமவிதிகளுக்கு எதிராக

ஏகதேசியையும் சிவராத்திரியையும் போல்

ஆலயங்களை அர்த்த சாமம் கடந்தும்

திறந்து வைத்து.......

காசுப்பார்க்க கடைவிரிக்கிறார்கள்

நாமும் கால்கடுக்க காத்திருந்து

கடவுளைத் தரிசிக்கிறோம்.....

கடைசியாய்.....

கடந்த வருடம் சொன்னது போல்

இவ்வருடமும் சொல்கிறேன்...

என்னடா இவன் சொல்கிறான் ஆங்கிலப் புத்தாண்டு அதுவுமாய்

கோவிலுக்கு போகாதீங்க கொண்டாடாதீங்க...ண்ணு... நாம

கோவிலுக்கு போகாணும் கொண்டாடவும் வேணும்(அவரவர் விருப்பத்தை பொறுத்து)

ஆனால் நம் பழக்க வழக்கங்களையும்

மரபுகளையும் மீறாமல்..........

நாமே நம் மரபுகளை கடைப்பிடிக்காவிட்டால்

வேறு யார் கடைப் பிடிப்பது....?
மா.பொ

No comments:

Post a Comment

About Me

My photo
Chennai, Tamil Nadu, India
முக்கடலின் திருவேணி சங்கமும் அன்னை குமரிஅம்மனும் வீரத்துறவி விவேகானந்தரின் நினைவுமண்டபமும் பாரததாயின் பாதமுமான கன்னியாகுமரிமாவட்டத்தில் 12 சிவாலய ஆலயங்களில் 11 வது ஆலயமான திருப்பன்றிகோடு ஸ்ரீமாஹாதேவர் குடிகொண்ட மற்றும் பள்ளியாடி பழய பள்ளியப்பன் பள்ளிக்கொண்டுள்ள பள்ளியாடி எனும் ஊரில் மாதவன், கோமதி என்போருக்கு நான்காவது மகனாக பிறந்தவன். வயிற்றுப்பிழைப்புக்காய் வாழ்க்கையின் வசந்தங்களோடு கைகுலக்க வேண்டி சென்னை மாநகருக்கு புலம் பெயர்ந்தவன். வந்த இடத்தில் வாழ்க்கைத்தரம் வளர சென்னைமாநகரம் வாய்ப்பளித்தது.தனிமரமாக வாழ்ந்த நான் கடந்த 2007 மே மாதம் 27ம் தேதி என்னோடு துஷாரா எனும் பெயருடைய இன்னொரு இணை மரத்தையும் என் வாழ்க்கையில் இணைத்துக்கொண்டேன் எங்களின் இனிய இல்லறத்தால் தயனியா என்ற விழுதினை 2009 மார்ச் 14 ம் தேதி ஈன்றெடுத்தோம்.தற்போது சென்னையில் சூளைமேடு எனும் பகுதியில் சந்தோஷமாய் வாழ்ந்து வருகிறேன்....

Search This Blog

Followers