Monday, July 11, 2011

பொங்கலோ பொங்கல்

பழமை மறவாமல்..............

மாடுகட்டிப் போரடித்தால்
மாழாது செந்நெல் எனவே
யானைக்கட்டி போரடித்த நாட்டில்
வயல் வெளிகளெல்லாம்......
வாழ்விடங்களாயாச்சு.....
வானை முட்டும் வணிக
வளாகங்களுமாயாச்சு

காடு கழனியெல்லாம் கான்கிரீட் வீடுகளாச்சு....
காய்கறித் தோட்டங்களின் நடுவில்
கல்லும் மணலும் குவிச்சாச்சு...
கறவை மாடுகளும் காளை மாடுகளும்
கசாப்புக் கடைக்கு அனுப்பியாச்சு
ஏரும் கலப்பையும் எங்கேயோ போயாச்சு....
விளைநிலங்கள் வீட்டுமனைகளாய்....
கூறுபோட்டு கூவிகூவி வித்தாச்சு....
விவாசாயியை வீதியில் நிற்க வெச்சாசு

நீர் நிலைகளில் நச்சு கலந்து
நாசம் செய்து மாசு படுத்தியாச்சு...
ஆடம்பரமா வாழ பழகியதால்
பகலவனின் கதிர்களைக்கூட பாழ்படுத்தியாச்சு
கண்டபடி வாழ்வதனால் கண்டதையெல்லாம்
வீதியெலே வீசியெறிஞ்சாச்சு..
சுற்றுப்புறச் சுத்ததை சுத்தமா மறந்தனனால்
சுற்றுப்புற சூழலும் சூனியமாச்சு...........ஆனாலும்
விவசாய விழாவான பொங்கலை
விமர்சாயாய் தான் வீ (தி) டு தோறும் கொண்டாடுகிறோம்.......

விளைப்பொருகளெல்லாம் வீட்டுமுற்றமதில்
பகலவன் கதிரொளி பட படையலிட்டு
பொங்கலோ ஓ பொங்கல் என
கூக்கிரலிட்டு......
மும்மாரிபொழிந்து முப்போகம் தந்த
மூலவனையும் மும்மூர்த்திகளையும்
கதிர் கொண்டு கதிர் வணங்கியகாலம்
பழங்கதையானது....

இயற்கையோடு நாம் இசைந்து வாழாமல்
செய்ற்கையாய் வாழப்பழகியாதால்
இயற்கையும் பொய்த்தது நம்
விவசாயமும் பொய்த்தது ..அதனால்
நகரங்களில் நாம் தஞ்சமடைய...
அடுக்கங்களும் வரிசைவீடுகளும்
நம் வசிப்பிடங்களாயின....

எங்கும்....
முற்றங்ளில்லா முறைவாசல்கள் அதனால்
சமையல் வாயுவின் தயவால்
வீட்டுக்குள்ளே பொங்கல் வைத்து
சாளரங்கள் வழியே வரும் ஒளியில்
பொங்கலோ ஒ பொங்க்ல் என
நாமும் கொண்டாடுகிறோம்....பொங்கலை
பழமை மறவாமல் இருக்க........
- மா.பொ

No comments:

Post a Comment

About Me

My photo
Chennai, Tamil Nadu, India
முக்கடலின் திருவேணி சங்கமும் அன்னை குமரிஅம்மனும் வீரத்துறவி விவேகானந்தரின் நினைவுமண்டபமும் பாரததாயின் பாதமுமான கன்னியாகுமரிமாவட்டத்தில் 12 சிவாலய ஆலயங்களில் 11 வது ஆலயமான திருப்பன்றிகோடு ஸ்ரீமாஹாதேவர் குடிகொண்ட மற்றும் பள்ளியாடி பழய பள்ளியப்பன் பள்ளிக்கொண்டுள்ள பள்ளியாடி எனும் ஊரில் மாதவன், கோமதி என்போருக்கு நான்காவது மகனாக பிறந்தவன். வயிற்றுப்பிழைப்புக்காய் வாழ்க்கையின் வசந்தங்களோடு கைகுலக்க வேண்டி சென்னை மாநகருக்கு புலம் பெயர்ந்தவன். வந்த இடத்தில் வாழ்க்கைத்தரம் வளர சென்னைமாநகரம் வாய்ப்பளித்தது.தனிமரமாக வாழ்ந்த நான் கடந்த 2007 மே மாதம் 27ம் தேதி என்னோடு துஷாரா எனும் பெயருடைய இன்னொரு இணை மரத்தையும் என் வாழ்க்கையில் இணைத்துக்கொண்டேன் எங்களின் இனிய இல்லறத்தால் தயனியா என்ற விழுதினை 2009 மார்ச் 14 ம் தேதி ஈன்றெடுத்தோம்.தற்போது சென்னையில் சூளைமேடு எனும் பகுதியில் சந்தோஷமாய் வாழ்ந்து வருகிறேன்....

Search This Blog

Followers